news

News May 8, 2024

டி20 தொடரைக் கைப்பற்றியது வங்கதேசம்

image

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்ற வங்கதேச அணி நெற்றி நடைபெற்ற 3ஆவது போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த வங்கதேச வீரர் தவ்ஹித் ஹ்ரிடோய் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4ஆவது போட்டி மே 12இல் நடக்கிறது.

News May 8, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 142 ▶குறள்: அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். ▶பொருள்: பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.

News May 8, 2024

100 கோடியைக் கடந்த அடுத்த மலையாளப்படம்

image

சமீப காலமாக வெளியாகும் தமிழ்படங்கள் மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறாமல் இருக்கும் நிலையில், மலையாள படங்கள் அடுத்தடுத்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தி வருகின்றன. இந்த ஆண்டில் மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு ஆகிய படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்திருந்த நிலையில், அண்மையில் வெளியான ஃபகத் பாசிலின் ‘ஆவேசம்’ படம் 150 கோடி வசூலித்துள்ளது. இதுதான் ஃபகத் பாசிலின் படங்களில் அதிகம் வசூலித்த படமாகும்.

News May 8, 2024

விடிய விடிய மழை பெய்யும் இடங்கள்

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி வரை கரூர், திண்டுக்கல், திருச்சி, நெல்லை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News May 8, 2024

சனாதன விரோதிகளுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

image

ராமர் கோயில் பாரம்பரிய முறைப்படி கட்டப்படாததால் அது பயனற்றது என சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமேதி தொகுதி வேட்பாளர் ஸ்மிருதி இரானி, INDIA கூட்டணியினர் ராமரையும், சனாதனத்தையும் எதிர்ப்பது தெரிந்த விஷயம்தான் என்றார். மேலும், சனாதன விரோதிகளுக்கு இந்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

News May 8, 2024

வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் மாயமாகும்

image

வாழைப் பழங்களில் அரிய பல மருத்துவ குணங்கள் உள்ளன. அவை என்னென்ன? *இரவில் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் மாயமாகும், வயிற்றுப் புண் நீங்கும் *மூல நோயின் பாதிப்பு குறையும் * குழந்தை பேறு இல்லாதவர்கள் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கி குழந்தை பேறு கிடைக்கும் * பழுத்த நேந்திரம் பழத்தை வேகவைத்து நெய் கலந்து சாப்பிட்டால் மெலிந்த உடல் தேறும்.

News May 8, 2024

புள்ளிப் பட்டியலில் முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ்

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிபெற்ற டெல்லி அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. இப்போட்டிக்கு முன்பாக 6ஆவது இடத்தில இருந்த DC, தற்போது ஒரு இடம் முன்னேறி 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி, லக்னோ அணிகள் 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

News May 8, 2024

பாஜகவின் பதிவை நீக்க X தளத்திற்கு உத்தரவு

image

இட ஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பாஜக வீடியோ வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக காங்., சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. அந்தப் பதிவை நீக்குமாறு தலைமை தேர்தல் ஆணையர் கர்நாடக பாஜகவிற்கு உத்தரவிட்டார். ஆனால், அந்தப் பதிவு நீக்கப்படாததால், அந்தப் பதிவை உடனே நீக்க X தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News May 8, 2024

வெற்றிப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கு தயாரான சுந்தர் சி

image

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையடுத்து ‘கலகலப்பு’ படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர் சி இறங்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமல், சிவா, அஞ்சலி, ஓவியா மூன்றாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.

News May 8, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!