India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிபெற்ற டெல்லி அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. இப்போட்டிக்கு முன்பாக 6ஆவது இடத்தில இருந்த DC, தற்போது ஒரு இடம் முன்னேறி 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி, லக்னோ அணிகள் 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
இட ஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பாஜக வீடியோ வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக காங்., சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. அந்தப் பதிவை நீக்குமாறு தலைமை தேர்தல் ஆணையர் கர்நாடக பாஜகவிற்கு உத்தரவிட்டார். ஆனால், அந்தப் பதிவு நீக்கப்படாததால், அந்தப் பதிவை உடனே நீக்க X தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையடுத்து ‘கலகலப்பு’ படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர் சி இறங்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமல், சிவா, அஞ்சலி, ஓவியா மூன்றாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.
இன்று (மே 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
* மக்களவைக்கு 3ஆம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் 61.45% வாக்குகள் பதிவாகியுள்ளன.
*ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
* ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.
* அரியலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலி
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிஎன்பி வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு செலுத்தாமல் தப்பிய அவரை இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, 2019இல் பிரிட்டன் அரசு கைது செய்தது. இதையடுத்து, பிரிட்டன் சிறையிலுள்ள அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்ட நிலையில், 5ஆவது முறையாக ஜாமின்கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அருவிகள், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தலமாக விளங்குகின்றன. அதில் சிலவற்றை தெரிந்து கொள்வோம். 1)குற்றாலம் மெயின் அருவி 2) குற்றாலம் ஐந்தருவி 3)பாபநாசம் அருவி 4)காரையாறு பாண தீர்த்த அருவி 5)மணிமுத்தாறு அருவி 5) நாகர்கோவில் திற்பரப்பு அருவி 6)தேனி சுருளி அருவி 7) கொடைக்கானல் கும்பக்கரை அருவி 8)ஒகேனக்கல் அருவி 9)வால்பாறை குரங்கு அருவி
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி போராடி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்து. 222 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய RR 20 ஓவரில் 201/8 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவை என்ற நிலையில் RR அணி 1 விக்கெட்டை இழந்து 8 ரன்கள் மட்டுமே எடுத்து.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 86 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிவந்த அவர் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் விளாசி 86 ரன்கள் அடித்தார். இது நடப்புத் தொடரில் சாம்சன் அடிக்கும் 5 ஆவது அரை சதமாகும். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் குமார் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
*மேஷம் – பொறுமை தேவை
*ரிஷபம் – வெற்றி கிடைக்கும்
*மிதுனம் – மகிழ்ச்சியான நாள்
*கடகம் – ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்
*சிம்மம் – வளர்ச்சி ஏற்படும்
*கன்னி – தடை உண்டாகும்
*துலாம் – நினைத்தது நிறைவேறும்
*விருச்சிகம் – கவனமாக இருக்கவும்
*தனுசு – உறுதியுடன் செயல்படலாம்
*மகரம் – திட்டமிட்டு செயல்படவும் *கும்பம் – திருப்திகரமான நாள் *மீனம் – முக்கிய முடிவுகளை தவிர்க்கவும்
Sorry, no posts matched your criteria.