news

News May 8, 2024

BREAKING: இடியுடன் மழை பெய்து வருகிறது

image

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரம் (காலை 10 மணி வரை) 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

News May 8, 2024

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அன்புமணி சவால்

image

தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரம் வழங்குவதை மின்துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா என பாமக தலைவர் அன்புமணி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயத்திற்கு 12 -16 மணி நேரம் மும்முனை மின்சாரமும், கடைமுனை நுகர்வோருக்குச் சீரான மின்சாரமும் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் என அவர் விமர்சித்துள்ளார்.

News May 8, 2024

லைக்குகளை குவிக்கும் பிரியங்கா மோகன்

image

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன், தமிழில் ’டாக்டர்’ படம் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார். அதனைத் தொடர்ந்து, ’டான்’, ’எதற்கும் துணிந்தவன்’ என அடுத்தடுத்த படங்களில் நடித்த அவர், தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். இந்நிலையில், அவர் சேலை அணிந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.

News May 8, 2024

ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நல குறைவு

image

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரேவண்ணா சிறப்பு விசாரணைக்கு குழு காவலில் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல் உறுப்புகள் சீராக இருப்பதாக தெரிவித்தனர். அதன்பின் அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றனர்.

News May 8, 2024

இறுதி முடிவுகளை மாற்ற முயற்சியா?

image

தமிழ்நாட்டில் வாக்கு சதவீதங்கள் அறிவித்ததில் முரண்பாடு ஏற்பட்டது ஏன் எனத் தேர்தல் ஆணையத்திடம் விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், வாக்கு சதவீத முரண்பாடு இறுதி முடிவுகளை மாற்றும் முயற்சியா என மக்கள் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளார். இனி வரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு நடந்த 24 மணி நேரத்தில் விவரங்களை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 8, 2024

IPL: இன்னும் ஒரு அணி கூட தேர்வாகவில்லை

image

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 56 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு அணி கூட தேர்வாகவுமில்லை, வெளியேறவும் இல்லை. KKR, RR அணிகள் 16 புள்ளிகளுடனும், CSK, SRH, DC, LSG அணிகள் 12 புள்ளிகளுடனும், RCB, PBKS, MI, GT அணிகள் 8 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அனைத்து அணிகளுக்கும் ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால், ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

News May 8, 2024

இரண்டு நாள்களில் 42,000 பேர் விண்ணப்பம்

image

+2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானதையடுத்து பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரண்டு நாள்களில் பொறியியல் படிப்பிற்கு தமிழகம் முழுவதும் சுமார் 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் நாளில் 2,097 பேரும் நேற்று 21,017 பேரும் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 6ஆம் தேதியாகும்.

News May 8, 2024

இன்று “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி தொடக்கம்

image

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. சென்னை, திருச்சி, கோவை, நாகை, மதுரை, நெல்லை, சேலத்தில் இன்றும், திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரியில் நாளையும், செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, குமரி, கிருஷ்ணகிரியில் மே 10ஆம் தேதியும், மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த நாள்களிலும் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

News May 8, 2024

செல்வா இயக்கத்தில் மீண்டும் நடிப்பேன்

image

‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால், செல்வராகவன் இயக்கத்தில் தொடர்ந்து 3 படங்களில் நடித்தார். அதன்பின் அவரைக் காதலித்து திருமணம் செய்தவர் சில ஆண்டுகளிலேயே விவாகரத்துப் பெற்றார். இந்நிலையில், நல்ல கதை அமைந்தால் செல்வராகவன் படத்தில் கண்டிப்பாக மீண்டும் நடிப்பேன் எனக் கூறிய அவர், ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

News May 8, 2024

நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை

image

டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கும் மேல் அடிப்பது என்பது தற்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 20 முறை 200+ ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அதிகபட்சமாகும். முன்னதாக கடந்த ஆண்டு 19 முறையும், 2022இல் 5 முறையும் அடிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இன்னும் 18 போட்டிகள் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!