India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமுல் நிறுவனம் தற்போது வரை தமிழகத்தில் பால் பண்ணையை அமைக்கவில்லை என தமிழக பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம், ஆவினுக்குப் போட்டியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பால் விற்பனையை தொடங்கியதாக தகவல் வெளியானது. இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக அரசு, அப்படி எதுவும் நடக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம், இந்தாண்டுக்குள் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னை மற்றும் சைபீரியாவில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், ஜெயம் ரவிக்கு பதிலாக, நடிகர் அசோக் செல்வன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா ஆக்கிரமிப்பாளர்களுக்கான தேசம் என காங்கிரஸ் கருதுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இந்திய மக்களை காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா நிறத்தின் அடிப்படையில் பிரித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், நாட்டிற்கு வெளியே எஜமானர்களை வைத்திருக்கும் காங்., கட்சியினரால் மட்டுமே இப்படி பேச முடியும் என்றார். மேலும், இந்தியர்களை ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றலாக காங்., கருவதாகத் குற்றம்சாட்டினார்.
பள்ளி ஆசிரியர்களை அலுவலகப் பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் செய்துத் தர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலை சிறையில் இருந்து அமைச்சரவை கூட்டத்தை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கூறி, பொதுநல மனுவை தாக்கல் செய்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ED கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு ஏன் ஜாமின் தரக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது.
ஹரியானாவில் பாஜக அரசு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என அம்மாநில முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். மற்ற கட்சிகளை சேர்ந்த பல எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருப்பதால் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று பாஜக அரசை ஆதரித்து வந்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், முதல்வர் நயாப் சிங் சைனி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர்.
முன்னணி நடிகர்கள் ஓடிடி தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் நிலையில், அதில் அதிக சம்பளம் பெறுபவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜய் தேவ்கன் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு எபிசோடில் நடிக்க ₹18 கோடி சம்பளம் பெறுகிறார். அடுத்தபடியாக, மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ₹10 கோடி வாங்குகிறார். தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.
ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மக்களின் நிறத்தை பல்வேறு நாட்டினருடன் ஒப்பிட்டு பேசியதை கண்டித்த அவர், தோல் நிறத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுவதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கருத்து தனக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளதாகவும், நாட்டு மக்கள் குறித்த அவரது கருத்தை சகித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் காவலராக நடித்த விஜய் முத்துவை, நடிகர் ரஜினி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். குணா குகையை மையமாக வைத்து உருவான இப்படம், கடந்த பிப்.22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகம் முழுவதும் ரூ.200+ கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், கடந்த மே 3ஆம் தேதி இப்படம் ஹாட்ஸ்டார் OTT-இல் வெளியானது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் கே.பூபதி மற்றும் மயிலாப்பூர் பகுதி தலைவர் கே.கோபிநாதன் உள்ளிட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போதே கூட்டணி அமைப்பதற்கு கே.பூபதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தமாகாவில் இருந்து விலகி அவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
Sorry, no posts matched your criteria.