India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் 63, 134, 130 என ரன்களை குவித்து டேரல் மிட்செல் மிரட்டியுள்ளார். இதனால் புதிய ODI பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு அவர் முன்னேறுவார். இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்தாலும் முதல் இடத்தை தக்க வைக்க முடியாது. கடைசி 7 இன்னிங்சில் 4 சதங்கள், 2 அரைசதம் அடித்து மிட்செல் சிறந்த ODI வீரராக வலம் வருகிறார்.

வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட முட்டை கொள்முதல் விலை சமீப நாள்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று முட்டை கொள்முதல் விலை ₹5.30-லிருந்து ₹5.00 ஆக சரிந்துள்ளது. இதன்மூலம் கடந்த <<18882290>>2 நாள்களில்<<>> மட்டும் ₹60 காசுகள் வரை குறைந்துள்ளது. இதனால், சில்லறை கடைகளில் ₹6 வரை முட்டை விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உங்கள் ஊரில் ஒரு முட்டை எவ்வளவு? கமெண்ட் பண்ணுங்க.

தமிழில் ஏஸ், மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் ருக்மிணி வசந்த். இதனிடையே அவர் காதலனுடன் இருப்பதாகக் கூறி ஒரு போட்டோ வைரலானது . இந்நிலையில் அந்த போட்டோவில் உள்ளது சித்தன் என்ற போட்டோகிராபர் என்பதும், அவர் ருக்மிணியின் நெருக்கமான நண்பர் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. 2023-ல் எடுத்த இந்த போட்டோ இப்போது வைரலாகியுள்ளது.

₹2,000 உரிமைத் தொகை, ஆண்களுக்கும் இலவச பஸ் என அதிமுக அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது. இந்நிலையில், NDA மட்டுமல்லாது, தவெகவுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்க திமுக தயாராகி வருகிறதாம். இதன் ஒரு பகுதியாக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தவும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விரைவில் இதுதொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SIR வரைவு வாக்காளர் பட்டியலில் கேரளா தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் விடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டில் அவர் பெங்களூருவில் இருந்ததால் அவர் பெயர் தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்து வாக்காளர் சேர்ப்பு முகாமில் தனக்கும், தனது மனைவி & மகனுக்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவர் விண்ணப்பித்துள்ளார்.

திமுக- காங்., இடையே நம்பிக்கையில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அவர்களிடையே கூட்டணி தொடருமா என்பதை சொல்ல முடியவில்லை என்ற அவர், 1967-ல் காங்கிரஸை திமுக முடித்தது; இப்போது ஒருவரை ஒருவர் முடித்துக் கொள்வார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அநீதியும் முடிந்துபோகும், மிகவும் மோசமான ஆட்சியும் முடிந்துபோகும். 2026 NDA கூட்டணிக்கானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்து பாமகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதான் நாணயமான கூட்டணி என மக்கள் பேசுகின்ற அளவிற்கு கூட்டணி அமையும் என்றும், அப்படிப்பட்ட கூட்டணியை உருவாக்க தீவிரமாக முயன்று வருவதாகவும் கூறியுள்ளார்.

‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பீட்டர் பாபியா (58) காலமானார். நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்றுவந்த பாபியா, அவரது சொந்த ஊரான சேலம் அஸ்தம்பட்டியில் பஸ்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர், ஹாஸ்பிடல் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். பாபியாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகளை இச்சமூகம் பெரிதாக அங்கீகரிப்பதில்லை என கார்த்தி கவலை தெரிவித்துள்ளார். உழவன் விருதுகள் விழாவில் பேசிய அவர், விவசாயிகளுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தாலும், அவர்களுடைய உழைப்பு ஒருபோதும் நின்றுவிடவில்லை என கூறியுள்ளார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோரை சமூகம் கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி அதிமுக பக்கம் சென்றுவிட்டதால், ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைவார் எனப் பேசப்படுகிறது. இதனால் விசிகவை சமரசம் செய்யும் வேலையில் திமுகவினர் இறங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சாதிய பாமக கட்சியுடன் எப்போதும் உறவு கிடையாது என விசிகவின் வன்னியரசு கூறியுள்ளார். இது, ராமதாஸ் மூலம் வடமாவட்டங்களில் பலம்பெற நினைத்த திமுகவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.