news

News May 8, 2024

இந்தியாவின் வளர்ச்சி சீன பாதையை ஒத்திருக்குமா?

image

இந்தியாவின் அடுத்த தசாப்த வளர்ச்சி, 2007 – 2012 வரையிலான சீனாவின் வளர்ச்சிப் பாதையை ஒத்திருக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்திருக்கிறது. அதன் அறிக்கையில், ”
பொருளாதார வளர்ச்சியில் நாட்டிற்கு பல சாதகமான நிலைமைகள் உள்ளன. புவிசார் அரசியல், ரியல் எஸ்டேட், டிஜிட்டல் மயமாக்கல், க்ரீன் எனர்ஜிக்கு மாறுதல், கடல்வழிப் போக்குவரத்து கட்டமைப்புகள் வளர்ச்சியைத் தூண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

News May 8, 2024

மீண்டும் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் ரூபாலா

image

ராஜபுத்திரர்கள் தொடர்பாக கூறிய கருத்துக்கு, 2ஆவது முறையாக மத்திய அமைச்சர் ரூபாலா மன்னிப்பு கோரியுள்ளார். பரப்புரையில் பேசிய அவர், ராஜபுத்திரர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்ததாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ராஜபுத்திர சமூகத்தினர், பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக ரூபாலா, ஏற்கெனவே மன்னிப்பு கேட்ட நிலையில், அதனை ராஜபுத்திர மக்கள் ஏற்கவில்லை.

News May 8, 2024

ஜாதகப் பொருத்தத்தை விட ரத்தப் பரிசோதனை முக்கியம்

image

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தான் பெற்றோர்கள் கூறியபடி திருமணம் செய்ததாக கூறிய அவர், மாலத்தீவில் திருமண ஜோடிகள் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ் சர்டிபிகேட் தருவதாகவும் கூறினார். தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், இக்கருத்தை முன்வைத்தார்.

News May 8, 2024

விரைவில் சந்தைக்கு வரும் கல்லினன் II சீரிஸ்

image

பிராண்டட் சொகுசு கார்களில், மிகுந்த வரவேற்பைப் பெற்ற கல்லினனின் II சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 6.75 லிட்டர் கெப்பாசிட்டி, 6750 cc, ட்வின்-டர்போ சார்ஜ்டு v12 இன்ஜின், 563 bhp பவர், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற நவீன வசதிகளை இந்த கார் கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள இதன் விலை ₹6.96 கோடியாகும்.

News May 8, 2024

லக்னோ அணி பேட்டிங்

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற LSG கேப்டன் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6இல் வெற்றி பெற்றுள்ள SRH அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதேபோல, 11இல் 6 போட்டிகளில் வென்றுள்ள LSG அணி, நெட் ரன் ரேட் அடிப்படையில் 6ஆவது இடத்தில் உள்ளது.

News May 8, 2024

₹20,000க்கு மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது

image

கடன் வழங்குவது தொடர்பாக வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC), ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தனிநபர் கடன் பெறுவோருக்கு ரொக்கமாக ₹20,000க்கு மேல் வழங்கக் கூடாது எனவும், இந்த விதிமுறைகளை NBFC-க்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக IIFL-இல் நிதி முறைகேடு நடந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

News May 8, 2024

மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

image

மோடியின் பேச்சு தொடர்பாக INDIA கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் நாளை புகார் அளிக்க உள்ளனர். ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து மோடி பேசியது, இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், INDIA கூட்டணி சார்பாக புகாரளிக்கப்பட உள்ளது. மேலும், மோடியின் பேச்சு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் செல்வப்பெருந்தகை வழக்குத் தொடுத்துள்ளார்.

News May 8, 2024

உலகக்கோப்பை டி20: பப்புவா நியூ கினியா அணி அறிவிப்பு

image

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பப்புவா நியூ கினியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அசாதுல்லா வாலா தலைமையிலான அந்த அணியில், சி.ஜெ. அமினி (துணை கேப்டன்), அலி நாவோ, சாட் சோப்பர், ஹிலா வரே, ஹிரி , ஜாக் கார்ட்னர், ஜான் கரிகோ, கபுவா வாகி மோரியா உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், ஏற்கனவே தங்களது டி20 அணிகளை அறிவித்துள்ளன.

News May 8, 2024

REWIND: 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி

image

+2 பொதுத்தேர்வில், திருப்பூரைச் சேர்ந்த மாணவி மகாலெட்சுமி 598/600 மதிப்பெண் பெற்றிருந்தது அனைவரும் அறிந்ததே. 2022-23 கல்வியாண்டில், வணிகவியல் பாடப்பிரிவில் படித்த திண்டுக்கல் மாணவி நந்தினி, 600/600 மதிப்பெண்கள் எடுத்து சாதித்திருந்தார். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 2 மதிப்பெண்கள் குறைவு என்றாலும், அதிகப்படியான மதிப்பெண்களை எடுத்து முதலிடத்தை பிடிப்பதில் மாணவிகள் எப்போதும் முன்னிலையிலேயே உள்ளனர்.

News May 8, 2024

கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெறும் மாவட்டங்கள்

image

+2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி பெற ஏதுவாக, ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை தமிழக அரசு இன்று தொடங்கி வைத்துள்ளது. அதன்படி, சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது. திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரியில் நாளை ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாணவர்கள் இதில் பங்கேற்று பயன்பெறுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!