India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குஜராத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான கில் (104) மற்றும் சாய் சுதர்சன் (103) சென்னை அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அடுத்தடுத்து சதமடித்தனர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை சேர்த்தது.
கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளதற்கு ஜெய்ராம் ரமேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதம் ஒருதலை பட்சமானது என்று விமர்சித்த அவர், இக்கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு நிரந்தர களங்கத்தை ஏற்படுத்தும் என்றார். முன்னதாக, தேர்தல் ஆணையத்தை விமர்சித்த கார்கேவுக்கு, தேர்தல் ஆணையம் விளக்க கடிதம் எழுதி அவரை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில், குஜராத் புது வரலாற்று சாதனை படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன், கில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடினர். சிஎஸ்கே பந்துவீச்சாளர்களால் அவர்களை பிரிக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய 2 பேரும் சதமடித்தனர். சுதர்சன் 103 ரன்னில் ஆட்டமிழக்க இந்த ஜோடி பிரிந்தது. இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்தது, IPL வரலாற்றில் புது சாதனை ஆகும்.
பாகற்காய் தோலை சீவி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை மிக்சியில் போட்டு தேன், எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் உப்பு, மிளகுதூள், தண்ணீர் சேர்த்து கலக்கினால் பாகற்காய் ஜூஸ் ரெடி. இது கல்லீரல் பிரச்னை வராமல் தடுக்கும். மேலும், நீரிழிவு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. உடல் வலிமையை கூட்டுவதற்கு உதவுகிறது.
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரர்கள் கில், சாய் சுதர்சன் அதிரடியாக சதம் விளாசினர். அகமதாபாத்தில் நடக்கும் இப்போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்சன் அதிரடியாக 50 பந்துகளில் சதம் விளாசினர். பின்னர் சாய் சுதர்சன் 103 ரன்னிலும், கில் 104 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் மறுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “இந்திய மக்களவை தேர்தலில் தலையிடவில்லை. அது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. இந்தியா மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டின் தேர்தல் விவகாரத்திலும் அமெரிக்க அரசு தலையிடுவதில்லை” என விளக்கமளித்துள்ளார்.
சமையலுக்கு மண் பாண்டங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், மண் பாண்டங்கள் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலனுக்கும் நல்லது என்றும், அதில் தயாரிக்கப்படும் உணவின் சத்துக்கள் குறையாது என்றும் கூறப்பட்டுள்ளது. நான்ஸ்டிக் பாத்திரங்கள் 170°C மேல் சூடானால், அதன் மேல் தடவப்பட்ட ரசாயனம் உணவில் கலந்து, தீங்கை விளைவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆச்சி மனோரமாவுக்கு பின் தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த நடிகை என புகழப்படுபவர் கோவை சரளா. இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவரும் அவர், அதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். தனியாக பூமிக்கு வந்த நாம், தனியாகத்தான் பூமியை விட்டு போகப்போகிறோம் என்றும், சுதந்திரமாக வாழ விரும்பும் நபர்களுக்கு ஒருவரை நம்பித்தான் வாழ வேண்டும் என்ற கட்டாயமில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.
CSK அணிக்கு எதிரான 59ஆவது லீக் போட்டியில், GT அணியின் கேப்டன் ஸுப்மன் கில், சாய் சுதர்ஷன் ஆகிய இருவரும் அதிரடி ஆடிவருகின்றனர். CSK அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து களமிறங்கிய GT அணியின் கேப்டன் சுப்மன் கில்லுடன் கைகோர்த்து ஆடிவரும் சாய் சுதர்ஷன், 32 பந்துகளில் 59 ரன்களை எடுத்து அந்த அணியின் ரன் ரேட்டிங்கை உயர்த்தி வருகிறார். சுப்மன் கில் 26 பந்துகளில் 3 சிக்ஸருடன் 56 ரன்களை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாத பட்ஜெட்டில் துண்டு விழுவதாக வேதனை தெரிவித்துள்ள பெண்கள், விலை உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.