India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானம், இயந்திரக் கோளாறு காரணமாகக் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அனைத்து சோதனைகளும் முடிந்து 362 பயணிகளும் விமானத்தில் அமர்ந்திருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓட தயாராக இருந்த நிலையில், இயந்திரத்தில் கோளாறு இருந்ததை விமானிகள் கண்டறிந்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால், விமான ஊழியர்கள் உட்பட 376 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
நமக்கு நாமே நேர்மையாக இருப்பது தான் போட்டியில் முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி என RCB வீரர் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், “என்னைப் பொறுத்த வரை எண்ணிக்கையை விட தரமே முக்கியம். இப்போதும் ஒரு பேட்ஸ்மேனாக முன்னேறுவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் எங்களுக்கு தோல்விகள் இருந்தன. இந்த வெற்றிகளால் எங்களுடைய தன்னம்பிக்கை திரும்பியுள்ளது” எனக் கூறினார்.
ஜி.வி.பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா நடிப்பில், யானை வேட்டையைப் பின்னணியாகக் கொண்ட ‘கள்வன்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும், விஜய் ஆண்டனி மற்றும் மிர்னாலினி ரவி நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களிலும் இன்று வெளியாகவுள்ளது. மேலும், சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘தி பாய்ஸ்’ திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படலாம் என ஒப்புக்கொண்டுள்ள அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அதை வாபஸ் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தடுப்பூசியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று (மே 10) வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, இன்று ஒரு நாள் மட்டும் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நீலகிரி மாவட்டத்திலும் இன்று 126வது மலர்க் கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையன்று மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும்.
தமிழக அரசு தடை விதித்த 23 வகை நாய் இனங்கள்: பிட்புல், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்ஃபோர்டு, ஃபிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல்டாக், போயர் போயல், காக்கேஷன் ஷெபர்டு, சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு, சௌத் ரஷ்யன் ஷெபர்டு, டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாபனிஸ் தோசா, அகிதா மேஸ்டிஃப், ராட்வெய்லர்ஸ், டெரியர், உல்ஃப் டாக், ரொடீசியன் ரிட்ச்பேக், கேனரியோ அக்பாஸ், மாஸ்கோ கார்ட், கேன்கார்சோ, பேண்டாக்.
பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர் விராட் கோலி அதிரடி காட்டியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 7 Four, 6 Six என விளாசி தனது 55ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். 92(47) ரன்கள் குவித்த நிலையில், அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் அவுட்டானார். இதனால் சதத்தை தவறவிட்டார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் (634) குவித்தவருக்கான ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார்.
கங்கை நதி விண்ணிலிருந்து பூமியை முதன்முதலில் தொட்ட நாள் அட்சய திருதியை என்பதால் எல்லா மங்கலங்களும் கூடிவரும் நாள் இது என நம்பப்படுகிறது. இந்நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதால், அவை மென்மேலும் வாங்கக்கூடிய யோகத்தை வழங்கும் என்பார்கள். அட்சய திருதியை இன்று அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 2.50 மணிக்கு முடியும். இந்நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கத்தை வாங்கலாம்.
வெள்ளிக்கிழமையான இன்று 4 தமிழ் படங்கள் திரைக்கு வந்துள்ளன. அந்த வகையில், ‘மெளன குரு’, ‘மகாமுனி’ ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமாரின் ‘ரசவாதி’ வெளியாகியுள்ளது. இப்படத்தில் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ படம் எதிர்ப்பார்ப்புகளோடு வெளியாகியுள்ளது. அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படமும், சிக்கல் ராஜேஷின் ‘மாயவன் வேட்டை’ என்ற படமும் திரைக்கு வந்துள்ளன.
சிறைகளில் நெரிசலைக் குறைக்க நாடு முழுவதும் திறந்தவெளி சிறைகளை உருவாக்கலாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், திறந்தவெளி சிறைகள் ராஜஸ்தானில் சிறப்பாகச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டினர். பகல் நேரத்தில் கைதிகள் வெளியே சென்று வேலை செய்து சம்பாதிக்கவும், மாலையில் சிறைக்குத் திரும்பவும் ஏற்பாடு செய்யலாம் என்றும் அறிவுறுத்தினர்.
Sorry, no posts matched your criteria.