news

News May 11, 2024

ப்ளே ஆஃப்க்கு செல்லுமா கொல்கத்தா?

image

ஐபிஎல்லில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. மும்பை அணி ஏற்கெனவே எலிமினேட் ஆகியுள்ள நிலையில், இன்றைய போட்டி மும்பைக்கு சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும். அதேநேரம் இன்றைய போட்டியில் கொல்கத்தா வெற்றிபெறும் பட்சத்தில் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறும் முதல் அணியாக இருக்கும். இன்று எந்த அணி வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.

News May 11, 2024

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் சோதனை

image

பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மே 4ஆம் தேதி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காரில் இருந்த கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில், சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது வீடு, மற்றும் தி.நகரில் உள்ள அலுவலகத்தில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் சோதனை மேற்கொண்டனர்.

News May 11, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶மே – 11, சித்திரை – 28 ▶கிழமை – சனிக்கிழமை ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM, 4:30PM – 5:30PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:30 AM – 10:00 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை நேரம்: 6:00 AM – 7:30 AM ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶திதி: சதுர்த்தி

News May 11, 2024

வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

image

கத்தார் தலைநகர் தோகாவில் டைமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதில் 88.36 மீ ஈட்டி எறிந்த அவர் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த சீசனில் இது அவரது சிறந்த தூரமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் செக் குடியரசின் ஜாகுப் வால்டெச் முதல் இடம் பிடித்தார்.

News May 11, 2024

யாரெல்லாம் பிரண்டையை தவிர்க்க வேண்டும்

image

பிரண்டை துவையலை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் பலப்படும். இதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, முதுகு வலியை நீக்கும். வாதம், கபத்தை கட்டுப்படுத்தும். கழுத்து வலியை குறைக்க பிரண்டை உதவுகிறது. பித்தத்தை அதிகப்படுத்தும் குணம் இதற்கு உண்டு. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

News May 11, 2024

கனமழையில் சிக்கி 60 பேர் பலி

image

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை மழை, வெள்ளத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

News May 11, 2024

சே குவேராவின் பொன்மொழிகள்

image

* அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும்.
* கல்வியறிவு பெற்றவராக இருப்பதே ஒரு புரட்சியாளரின் முதற் கடமை.
* ஒரு புரட்சிகர சூழ்நிலைக்காக ஒருவர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அதை உருவாக்க முடியும்.
* மனிதர்களை மிருகங்களாக மாற்றுவதே ஏகாதிபத்தியத்தின் இயல்பு.
* மண்டியிட்டு வாழ்வதை விட எழுந்து நின்று சாவது மேல்.

News May 11, 2024

மீண்டும் விஜய் தேவரகொண்டா படத்தில் ரஷ்மிகா?

image

விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தனாவும் இணைந்து தெலுங்கில் ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்திருந்தனர். சமீப காலமாக இவர்கள் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது. இருப்பினும், இருவரும் அது குறித்த கேள்வியை தவிர்த்தே வருகின்றனர். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 14ஆவது படத்தில் ரஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News May 11, 2024

மே 17இல் கொடைக்கானல் மலர் கண்காட்சி

image

சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 17ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பாக மலர் கண்காட்சியும், சுற்றுலாத்துறை சார்பாக கோடை விழாவும் மே 17 முதல் 26 வரை நடைபெறுகிறது. இந்த விழாவைக் காண சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

News May 11, 2024

மோடி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் எழுச்சி

image

காங்., ஆட்சி காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் பலனளித்ததாகக் கூறிய அவர், மோடி ஆட்சியின் கீழ் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றதாகவும் கூறியுள்ளார். அதற்கு உதாரணமாக ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!