news

News May 11, 2024

96 தொகுதிகளில் இன்று பரப்புரை ஓய்கிறது

image

மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 96 தொகுதிகளில் இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆந்திரா 25, தெலங்கானா 17, உ.பி 13, மகாராஷ்டிரா 11, ம.பி 8, மே.வ 8, ஜார்க்கண்ட் 4, ஒடிசா 4, பிஹார் 5, ஜம்மு 1 தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா, ஓவைசி உள்பட முக்கிய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

News May 11, 2024

Redpix ஆசிரியர் பெலிக்ஸ் கைது

image

Redpix யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு Redpix-இல் பேட்டி அளித்ததே மூல காரணம். இதைத்தொடர்ந்து, பெலிக்ஸ் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு விசாரணையின்போது, நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் வகையில் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க நீதிபதி கூறியிருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News May 11, 2024

சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து

image

சிவகாசி அருகே நாரணாபுரம்புதூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன மூலப்பொருள் சேமித்து வைத்திருந்த கிடங்கு வெடித்துச் சிதறியதில், 3 அறைகள் தரைமட்டமானது. அதிகாலையில் தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கீழதிருத்தங்கலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த 2 நாட்களில், மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 11, 2024

ஒரே நாளில் ₹16,000 கோடிக்கு விற்பனை

image

அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ₹1,240 உயர்ந்து 1 சவரன் 22 கேரட் தங்கம் ₹54,160க்கு விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்தும் பொதுமக்களிடையே வாங்கும் ஆர்வம் குறையவில்லை. இந்நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் ₹16,000 கோடிக்கு (24,000 கிலோ) தங்கம் விற்பனையானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4,000 கிலோ அதிகமாகும்.

News May 11, 2024

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை

image

குஜராத்-சென்னை இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில், புதிய வரலாற்று சாதனை பதிவாகியுள்ளது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில்லும், சாய் சுதர்ஷனும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர். குறிப்பாக, ஷுப்மன் கில் அடித்த சதம், ஐபிஎல் தொடரின் 100ஆவது சதம் ஆகும். 2008இல் பெங்களூருவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 158*(73) முதல் சதத்தை பதிவு செய்தார்.

News May 11, 2024

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News May 11, 2024

ஓட்டுநர், நடத்துநருக்கு 12 மணி நேர வேலை

image

140 வழித்தடங்களில் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுப்பதாக தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நலத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதேபோல் 12 மணிநேரமாக வேலைநேரம் மாற்றப்பட்டது. அப்போது போக்குவரத்து ஊழியர் சங்க எதிர்ப்பை தொடர்ந்து அது கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இம்முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

News May 11, 2024

1.12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

image

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மே 6 முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு நேற்று மாலை வரை 1,24,012 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க மே 20 வரை அவகாசம் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

News May 11, 2024

நோட்டாவுக்கு வாக்கு கேட்கும் காங்கிரஸ்

image

நாடு முழுவதும் மூன்று கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நான்காம் கட்டத் தேர்தல் மே 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தொகுதியான இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானியை எதிர்த்து காங்., சார்பில் அக்சய் காந்தி களமிறக்கப்பட்டார். கடைசி நேரத்தில் அவர் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். இதனால், அங்கு காங்கிரசார் நோட்டாவிற்கு வாக்களிக்கும்படி கேட்டு வருகின்றனர்.

News May 11, 2024

10ஆம் வகுப்பில் தனுஷ் மகன் லிங்கா 460 மார்க்

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், நடிகர் தனுஷ் இளைய மகன் லிங்கா 500க்கு 460 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 88, ஆங்கிலத்தில் 90, கணிதத்தில் 96, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 87 என மொத்தம் 460 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் முதல் குரூப் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!