India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் பொது அழைப்பை விடுத்திருந்தனர். இதனை ஏற்பதாகக் கூறிய ராகுல் காந்தி, மக்களுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் தங்களின் பார்வைகளை முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான நல்ல முன்னெடுப்பாக இந்த விவாதம் அமையட்டும் என்று வரவேற்றுள்ளார்.
ரூ.2 கோடி வரை 400 நாள்கள் F.D. செய்யும் சாதாரண மக்களுக்கு 5%- 7.25% வரையும், மூத்த குடிமக்களுக்கு 5%- 7.75% வரை வட்டி வழங்கப்படுமென CUB தெரிவித்துள்ளது. 18 முதல் 24 மாதங்களுக்கு ரூ.2 கோடி வரை டெபாசிட் செய்யும் சாதாரண மக்களுக்கு 8%, மூத்த குடிமக்களுக்கு 8.50% வட்டி வழங்கப்படுமென RBL தெரிவித்துள்ளது. உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, கேபிடல் ஸ்மால் பைனான்ஸ் வங்கியும் F.D. வட்டியை மாற்றியுள்ளன.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் விளையாடுகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8இல் வெற்றி பெற்றுள்ள KKR அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்ற MI பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்ததால், இது அந்த அணிக்கு சம்பிரதாய ஆட்டம் தான்.
ஒடிஷா மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களை தெரிவிக்க முடியுமா என்று ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மோடி சவால் விடுத்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஒடிஷா முதல்வராக நீண்டகாலம் நவீன் பட்நாயக் பதவி வகிப்பதாகவும், அப்படியிருக்கும் அவரால் குறிப்புகள் இல்லாமல் மாவட்டங்களின் பெயர்களையும், அதன் தலைநகர்களின் பெயர்களையும் தெரிவிக்க முடியுமா என்று சவால் விடுத்தார்.
மும்பை-கொல்கத்தா அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. கொல்கத்தா மைதானத்தில் போட்டி நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதமானது. தற்போது மழை நின்றுள்ளதால் டாஸ் போடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், நேரமின்மை காரணமாக 20 ஓவர் ஐபிஎல் போட்டி தற்போது 16 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
உச்ச நீதிமன்றம் தனக்கு அளித்த இடைக்கால ஜாமினை, நற்சான்றிதழாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருதுகிறார் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “கெஜ்ரிவாலுக்கு சட்டத்தை பற்றிய புரிதல் இல்லை. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத்தான் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதே தவறு என்று நீதிமன்றம் சொல்லவில்லை” என்றார்.
2024-25 கல்வியாண்டில், பொது மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், மே 13 – 17ஆம் தேதி மாலை 6 மணி வரை EMIS மூலம் பொதுமாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களில் தவறு இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க, தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்கள் வழியே திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு 14 நாள்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16, 18,23,25,30, ஜுன் 1,6,8,13,15,20,22,27,29 தேதிகளில் இரவு 9.40 மணிக்கு ரயில் புறப்படும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, கடையநல்லூர், தென்காசி வழியே கொச்சுவேலிக்கு மறுநாள் செல்லும். அதே மார்க்கத்தில் திரும்பும்.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி செய்துவருகிறார். திட்டமிட்ட பட்ஜெட்டை இப்போதே தாண்டிவிட்டதால், பிசினஸ் கணக்குகளைச் சொல்லி, அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கு லைகா நிறுவனம் பணம் தரமறுத்துள்ளது. அஜித் தனது சம்பளத்தில் 20 சதவீதத்தை விட்டுக்கொடுத்தால், மேற்கொண்டு பணத்தைத் தர சம்மதம் என்று லைகா தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வங்கியில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ளாத, இருப்பு இல்லாத கணக்குகளை ரத்து செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த கணக்குகளை பயன்படுத்த விரும்பினால், KYC ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த நடைமுறை ஜூன் 1 அன்று அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.