India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடைக்கானல் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் சூழலில், அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் அனைத்து வாகனங்களும் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சுகள் அனைத்தும் நிரம்பி, 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். எனவே சாமி தரிசனம் செய்ய 16 மணி நேரம் ஆனது. அதேநேரத்தில் ரூ.300 தரிசன டிக்கெட் எடுத்தோர் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
தன் மீது எத்தனை வழக்குகளை தொடுத்தாலும், பேசுவதை நிறுத்த மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “போதைப்பொருள் வியாபாரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கிய திமுகவைப் பற்றி மக்கள் நன்கு அறிவர். உண்மையை பேசியதற்காக என் மீது வழக்கு போடுகிறார்கள். வழக்குகளை போட்டு, நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது”எனக் குறிப்பிட்டுள்ளார்.
4ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆந்திரா, தெலங்கானா உள்பட மொத்தம் 96 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதேபோல ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
லைஃப் இன்சூரன்ஸ் & காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை கிராமப்புறங்களில் விரிவுபடுத்துவதை IRDAI கட்டாயமாக்கியுள்ளது. ‘2047க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற நோக்கத்தில், இந்த புதிய விதிமுறை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட கிராமங்களை ஒதுக்கி, பரஸ்பர ஒப்பந்தம் மூலம் இன்சூரன்ஸ் சேவைகளை வழங்க IRDAI திட்டமிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெறாமல் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்ற தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி சென்றார். அவருக்கு பின்பாக தேமுதிக தொண்டர்களும் வாகன பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.
2050இல் ஆணுறுப்பு புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 77%க்கும் அதிகமாக உயரும் என்று குளோபல் கேன்சர் ரெஜிஸ்ட்ரி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், 2023இல் உலகளவில் 13,211 பேர் இந்நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான வளரும் நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க HPV தடுப்பூசி போட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமாவில் சாதியைப் பற்றி பேசும் இயக்குநர் வெற்றிமாறன் போன்றவர்களை மக்கள் ஒதுக்க வேண்டும் என்று இயக்குநர் பிரவீன் காந்தி கூறியிருந்தார். இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், இந்தியா முழுவதும் சாதிய கொடுமைகள் நடக்கிறது. அதற்கு பல சம்பவங்கள் உதாரணமாக இருக்கின்றன. நாட்டில் சமூக ஏற்றத்தாழ்வு, பாகுபாடு இல்லையென சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் எனத் தெரியவில்லை என்று கூறினார்.
அண்ணா – முத்துராமலிங்கத்தேவர் குறித்து பேசிய தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழ்நாடு அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார். இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய முகாந்திரம் இருப்பதாகக் கூறி, தமிழக அரசு ஆளுநர் R.N.ரவிக்கு பரிந்துரை செய்தது. ஓராண்டு கழிந்த நிலையில், அண்ணாமலை மீது வழக்குப் பதிய ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை நடிகை நயன்தாரா கொண்டாடினார். அன்னையர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து, நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் வீடியோ பகிர்ந்துள்ளார். அதில் தனது குழந்தைகளான உயிர், உலகுடன் நயன்தாரா விளையாடும் காட்சி உள்ளன. நீதான் என்னுடைய உயிர், உலகம் என அந்த வீடியோவில் நயன்தாரா பதிவுகளை வெளியிட்டுள்ளார். இதை நயன்தாரா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.