India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மே 16ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு சில இடங்களில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 1,710 வேட்பாளர்களில், 360 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும், 476 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாகவும், 24 பேரிடம் எந்த சொத்தும் இல்லை எனவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர். அவர்களில் 11 பேர் மீது கொலை வழக்கும், 5 பேர் மீது பாலியல் வழக்குகளும் பதிவாகியுள்ள நிலையில், 17 பேர் பல வழக்குகளில் தண்டனையும் பெற்றுள்ளனர்.
ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் வேட்பாளர் ரவிச்சந்திரா ரெட்டிக்கு ஆதரவாக அவர் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, விமான நிலையத்தில் இருந்து ரவிச்சந்திரா வீடு வரை பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், அனுமதியின்றி பேரணி சென்றதாக அல்லு அர்ஜூன் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று அதிகாலை மும்பைக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்த சாதனையை அந்த அணி படைத்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
வாழ்நாளில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டிய நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. ‘CEOWORLD’ என்ற இதழ் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில், தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து கிரீஸ், இந்தோனேஷியா, போர்ச்சுக்கல், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பெரு, இத்தாலி, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில், நீங்கள் செல்ல விரும்பும் நாடு எது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.
சென்னை அசோக் நகரில் தெருவில் தூங்கியோர் மீது திடீரென கார் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னைக்கு விசேஷத்துக்காக வந்தவர்கள் தெருவில் தூங்கியுள்ளனர். அப்போது கூகுள் மேப் உதவியுடன் வந்த வடமாநில பெண் ஒருவர் முட்டு சந்து என்று தெரியாமல் தூங்கியோர் மீது காரை ஏற்றியிருக்கிறார். நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. பொது மக்கள் அப்பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அயர்லாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2ஆவது டி20 கிரிகெட் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாக். அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே, இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற அயர்லாந்து அணி தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு கிடைக்கும் ஆதரவை கண்டு எதிர்க்கட்சிகள் விரக்தி அடைந்துள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். மோடிக்கு 75 வயது ஆனதும், அமித் ஷா பிரதமராவார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதற்கு தனது X பக்கத்தில் பதிலளித்துள்ள யோகி, மோடியின் வயதை காட்டி எதிர்க்கட்சிகள் சாக்குப்போக்கு தேடுவதாகக் கூறினார்.
தமிழகம் முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த நடிகர் சூர்யா முடிவெடுத்துள்ளார். தற்போது, 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில், இதில், வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும், எதிர்கால திட்டமிடலை முன்வைத்தும் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் விஜய்யை தொடர்ந்து, சூர்யாவும் அரசியலுக்கு அடித்தளம் இடுகிறாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
கிராண்ட் செஸ் டூர் தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். போலந்தில் நடக்கும் இத்தொடரில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், நேற்றைய போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம் கார்ல்சன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் சீனாவைச் சேர்ந்த Wei Yi, 3வது இடத்தில் பிரக்ஞானந்தா உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.