news

News May 12, 2024

மைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை

image

பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI, அபராதம் செலுத்த வலியுறுத்தும் வங்கிகள் மீது Bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனக் கூறியுள்ளது.

News May 12, 2024

இந்திய கிரிக்கெட் அணியில் இனவெறி?

image

இந்திய அணியில் இனவெறி நிலவியதாக முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த அவர், 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பைகளை கைப்பற்றிய இந்திய அணியில் விளையாடியிருந்தார். இந்நிலையில் அவர், கிரிக்கெட் அணியில் தாம் விளையாடிய காலம் முதல், தென்னிந்திய மக்களுக்கு எதிரான மனநிலையை கண்டதாகவும், “மதராசி” என்று தாம் அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

News May 12, 2024

₹17,528 கோடி லாபம் ஈட்டிய டாடா மோட்டார்ஸ்

image

2023-24 Q4 காலாண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ₹17,528 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ₹5,496 கோடியாக இருந்த நிகர லாபம் தற்போது 222% உயர்ந்துள்ளது. அதேபோல், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹1,05,932 கோடியில் இருந்து ₹1,19,986 கோடியாக உயர்ந்துள்ளது. EV வாகனப் பிரிவில், டாடா 48% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

News May 12, 2024

மோடி என்ற பிராண்டைப் பயன்படுத்த நினைக்கிறார்கள்

image

பொதுமக்கள் முன்னிலையில் பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “ராகுல் காந்தி தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்க மோடி என்ற பிராண்டைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பிரதமர் பதவியில் இருக்கும் மோடி, ராகுலுடன் ஏன் விவாதிக்க வேண்டும்?” என்றார்.

News May 12, 2024

இரவுப்பணி செல்வோருக்கு காத்திருக்கும் ஆபத்து

image

உலகமயமாக்கலுக்கு பிறகு, நைட் ஷிஃப்ட் என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், இரவில் கண் விழித்து பணி செய்வோருக்கு நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. சிலருக்கு இதய நோய், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இரவில் விழித்திருப்பவர்களுக்கு இன்சுலின் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

News May 12, 2024

கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன விலகல்

image

இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News May 12, 2024

வெளுத்து வாங்கும் கனமழை

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை, திருவாரூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், குமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

News May 12, 2024

பாகுபலி-3 விரைவில் அறிவிப்பு வெளியாகும்!

image

‘பாகுபலி – கிரவுன் ஆஃப் பிளட்ஸ்’ என்ற அனிமேட்டட் வெப் தொடர் வருகிற மே 17ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது. அதன் புரொமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமெளலியிடம், “பாகுபலி 3ஆம் பாகம் எப்போது வெளியாகும்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிரபாஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என பதிலளித்துள்ளார்.

News May 12, 2024

CSK ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது

image

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அனைவரும் மைதானத்திலேயே இருக்குமாறு CSK நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. அது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு CSK வீரர்கள் ஆட்டோகிராப் போட்ட நினைவுப் பரிசு, ஜெர்சி, பந்து போன்றவற்றை ரசிகர்கள் அனைவருக்கும் வழங்க CSK நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் CSK ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News May 12, 2024

விரைவில் திமுக அரசு தூக்கி எறியப்படும்: ஓபிஎஸ்

image

தமிழகத்தில் திமுக அரசு 3 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நடப்பது சொல்லாட்சி இல்லை, செயலாட்சி எனக் கூறியிருந்தார். அதை விமர்சித்துள்ள ஓபிஎஸ், 3 ஆண்டுகால திமுக ஆட்சி பொய்மையின் மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது என்றும், விரைவில் மக்களின் விருப்பத்திற்கிணங்க பொய்யாட்சி தூக்கி எறியப்பட்டு செயலாட்சி ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!