India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து தினேஷ் கார்த்திக் மோசமான சாதனை படைத்துள்ளார்.
டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் 18 முறையும், ரோஹித் ஷர்மா, மேக்ஸ்வெல் தலா 17 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர். சுனில் நரைன் 16 முறை டக் ஆவுட் ஆகியுள்ளார்.
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் பாஜக கண்டிப்பாக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜகவிற்கு மக்களிடம் அதிக ஆதரவு கிடைப்பதாக தெரிவித்த அவர், கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றார். தமிழகத்தில் 4 முதல் 5 தொகுதிகளில் பாஜக மிக வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று (மே 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ 96 தொகுதிகளில் இன்று 4ஆம் கட்ட தேர்தல்
➤ மல்லிகார்ஜுன கார்கே வந்த ஹெலிகாப்டரில் சோதனை
➤ மோடி தான் மீண்டும் பிரதமர் – ரவிசங்கர் பிரசாத்
➤ அதிமுக தலைமை மாறலாம் -அமைச்சர் ரகுபதி
➤மோகனின் புதிய படம் ஜூன் 7இல் ரிலீஸ்
➤ ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி
ஆடுகளத்தில் விக்கெட் வீழ்த்தும்போதும் சரி, ரன்களை குவிக்கும்போதும் சரி KKR வீரர் சுனில் நரைன் மற்ற வீரர்களை போல உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. இதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் கூறிய நரைன், “விளையாட்டில் தோல்வியுற்றவரின் மனதைக் காயப்படுத்தும் வகையில், வெற்றியைக் கொண்டாடக் கூடாது என்று என் தந்தை கூறியிருக்கிறார். அதனால்தான் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டேன்” என்றார்.
உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் மேலும் 9 கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயன்றதை கண்டித்து, அந்நாடு மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடுத்து முன்னேறி வருகின்றன. கார்கிவ் பிராந்தியத்தில் மீண்டும் தாக்குதலை நடத்த தொடங்கிய அவர்கள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றனர். இதை சுட்டிக்காட்டி, கார்கிவில் நிலவரம் மோசமாகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்வரிசை ஆட்டக்காரரான பாபர் அசாம் தனது ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் அறிவுரை கூறியுள்ளார். கராச்சியில் பேசிய அவர், “பவர் பிளே ஓவர்களை பாபர், ரிஸ்வான், ஃபகர் ஸமான் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல அழுத்தமான சூழல்களில் பந்துவீசுவதற்கு பந்துவீச்சாளர்களும் தயாராக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
டெல்லிக்கு அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு 187/9 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரஜத் படிதார் 52 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய டெல்லி, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. இறுதியில் அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அக்சார் பட்டேல் 57 ரன்கள் எடுத்தார்.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஏராளமான அரசு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. தொடர்ந்து தற்போது மின்னஞ்சல் மூலம் விமான நிலையம், மருத்துவமனைகளுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மிரட்டல் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.
*மேஷம் – அமைதி உண்டாகும்
*ரிஷபம் – இன்பமான நாள்
*மிதுனம் – புகழ் கிடைக்கும்
*கடகம் – வெற்றிகரமான நாள்
*சிம்மம் – அனுகூலம் ஏற்படும்
*கன்னி – உதவி தேவைப்படும்
*துலாம் – போட்டியை தவிர்க்கவும்
*விருச்சிகம் – செலவு அதிகரிக்கும்
*தனுசு – சஞ்சலம் உண்டாகும்
*மகரம் – உயர்வு ஏற்படும் *கும்பம் – நன்மை கிடைக்கும் *மீனம் – சுபகாரியம் நிகழும்
Sorry, no posts matched your criteria.