India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் குஜராத் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. குஜராத் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வென்று, நல்ல ரன்-ரேட்டை பெற்று, மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். ஆனால், கொல்கத்தா அணி ஏற்கெனவே பிளே-ஆஃப்-க்கு தகுதி பெற்றுள்ளது.
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே 2ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நள்ளிரவு 1 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
➤ ஆந்திராவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்
➤ பாஜக இந்த தேர்தலில் மக்களால் அப்புறப்படுத்தப்படும் – மம்தா
➤ காங்கிரஸ் வரலாறு காணாத படுதோல்வியை சந்திக்கும் – மோடி
➤ மக்களை மோடி எப்போதும் நினைப்பது இல்லை – ராகுல்
➤ சூர்யா படத்தில் இணைந்த ஜோஜு ஜார்ஜ்
➤ டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி
மெதுவாக, கொஞ்சம் அகலமாக பந்து வீசினால் சூர்யகுமாரை எளிதில் வீழ்த்தலாம் என அம்பத்தி ராய்டு தெரிவித்துள்ளார். பவுண்டரி அளவு பெரியதாக இருக்கும் போது, சூர்யகுமாருக்கு எதிராக இந்த முறையை எதிர் அணிகள் பயன்படுத்துவதாக கூறிய அவர், 2023 உலகக் கோப்பை போட்டில் ஆஸி., அணி இதை பயன்படுத்தியே அவரை வீழ்த்தியதாக தெரிவித்தார். கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி போட்டியில் அவர், 14 பந்துகளில் 11 ரன் மட்டுமே அடித்தார்.
மோடி அரசு தோற்கடிக்கப்படாவிட்டால், நாடு கருப்பு நாள்களை காணும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜக ஊழல்வாதிகளை கட்சிக்குள் நுழைய அனுமதித்து, அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறிய அவர், எதிர்க்கட்சிகள் இந்தியாவை பற்றி பேசும் போது , மோடி பாகிஸ்தானை பற்றியே நினைப்பதாக விமர்சித்தார். பாஜகவுக்கு பரப்புரை செய்ய எதுவும் இல்லாததால், வடக்கில் ராமரை முன்னிறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சோம்பு வயிற்று வலி, குமட்டல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகிறது. இருமல், தொண்டை புண், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகளை குணமாக்கவும் பயன்படுகிறது. இதில், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் சோம்பு உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.
400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற பாஜகவின் கனவு நிறைவேறாது என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஒரு தேசிய கட்சியின் தலைவரை சிறையில் வைக்க முடியாது என்று கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றமே ஜாமின் வழங்கியதாக தெரிவித்த அவர், பாஜகவால் வெற்றி என்ற கரையை இந்த முறை கடக்க முடியாது என்றார். தேர்தலில் பாஜக தோற்று வனவாசத்திற்கு செல்லும் என்றும் சூளுரைத்தார்.
மே – 13 | சித்திரை – 30
▶கிழமை: திங்கள்
▶நல்ல நேரம்: 06:30AM -07:30AM, 4:30PM – 5:30PM
▶கெளரி நேரம்: 09:30 AM – 10:30 AM, 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:30 PM
▶குளிகை: 01:30 PM – 03:30 PM
▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர்
▶ திதி : ஷஷ்டி
சென்னை அணிக்கு எதிரான தோல்வி, தங்களுக்கு மிகச்சிறந்த பாடம் என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை கணித்து, அதற்கேற்ப தங்களால் விளையாட முடியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். நடப்பு தொடரில் சிறப்பான விளையாடி வந்த ராஜஸ்தான் அணி, கடந்த 3 போட்டிகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. அந்த அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 2ஆவது இடத்தில் உள்ளது.
தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. நம் உடல் எடை 60% தண்ணீரால் ஆனது. நாம் சரியாக செயல்பட தண்ணீர் அவசியம். தண்ணீர் குறைவாக குடிப்பது பல ஆபத்துகளை ஏற்படுத்தும். தண்ணீர் குறைவாக குடிப்பதால் முதலில் நீரிழப்பு ஏற்படும். தலைவலி, சோர்வு, வறண்ட வாய், தாகம், சிறுநீர் குறைதல் போன்றவை நீரிழப்பின் அறிகுறிகள். மேலும், மலம் கடினமாகி மலச்சிக்கல் ஏற்படும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Sorry, no posts matched your criteria.