India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் விஜய் நன்றாகச் செயல்படக் கூடியவர் என்றும், அவர் அரசியல் கட்சி தொடங்கியதில் மகிழ்ச்சி எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அத்துடன், எம்ஜிஆரைப் போல அவர் சம்பாதித்த பணத்தை பொதுமக்கள், மாணவர்களுக்குச் செலவு செய்ய நினைப்பதாகவும் புகழ்ந்து கூறினார். முன்னதாக, நேற்று இபிஎஸ் பிறந்தநாளையொட்டி, அவருக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறைந்த நாகை எம்பி செல்வராஜ் கட்சியில் பல பெரிய பொறுப்பு, பதவிகளில் இருந்தபோதும், கடைசி வரை மக்கள் தொண்டராக இருந்தவர். 7 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 4 முறை (989, 1996, 1998, 2019) எம்பியாக தேர்வானவர். அவரின் இறுதிச் சடங்கு சித்தமல்லி கிராமத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் தமிழக முழுவதும் செங்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் இந்திய கம்யூ., அறிவித்துள்ளது.
உ.பி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. மேலும், ஆந்திரா, ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் ஆரம்பித்துள்ளது. ஆந்திராவில் 175 தொகுதிகளிலும், ஒடிசாவில் 28 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019இல், தற்போது தேர்தல் நடக்கும் 96 தொகுதிகளில், பாஜக கூட்டணி 41 இடத்திலும், INDIA கூட்டணி 11 இடத்திலும் வென்றிருந்தன.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சாதிய அடக்குமுறைக்கு எதிராக வெகுண்டெழுந்த செல்வராஜ், 1975இல் இந்திய கம்யூ., கட்சியில் இணைந்தார். சாணிப்பால் சவுக்கடி கொடுமைக்கு எதிராக விவசாய தொழிலாளர்களை திரட்டி போராட்டம் மூலம் வென்று காட்டியவர். ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருந்த அவர், ஏழை எளிய மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தி வெற்றிக் கண்டு, நாகை மாவட்டத்திற்கு ஒளியாக திகழ்ந்தவர்.
ஐபிஎல் தொடரின் தற்போதைய புள்ளிப் பட்டியல் சுவாரஸ்யமான பல வாய்ப்புகளை முன்னிறுத்துகிறது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெறும் CSK – RCB இடையேயான போட்டி Knock-out போட்டியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுக்கும் 1 போட்டி மட்டுமே மீதமிருக்கும் நிலையில் கடைசிப் போட்டியை வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு போகலாம். அல்லது, இரண்டு அணிகளுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது.
10ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுநர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு (MLM), வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்புப் பயிற்சி மையம் மாணவர்கள் முன்னதாக பயின்ற பள்ளியிலேயே நடைபெறும்.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSRCP, அவரது சகோதரி ஷர்மிளா தலைமையிலான காங்கிரஸ், தெலுங்கு தேசம் – பாஜக – ஜனசேனா கூட்டணி என மூன்று அணிகள் இந்த தேர்தலில் களமிறங்குகின்றன. மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்றைய வாக்குப்பதிவில் சுமார் 17 கோடியே 47 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.
12ஆம் வகுப்பு முடித்தவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி தமிழக பொறியியல் கல்லூரிகளில் இணைவதற்கு இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 6ஆம் தேதி தொடங்கியது.
கோயில் நகரமான காஞ்சியில் உள்ளது பெருமை வாய்ந்த திருப்பாடகம் – பாண்டவதூதப் பெருமாள் கோயில். இத்தலத்தில் பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமித் தாயாரோடு அருள்பாலிப்பதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்குச் செல்வ வளம் சேரும் என்கிறார்கள். அத்துடன், பெருமாளின் எட்டுத் திருக்கரங்களிலும் எட்டு ஆயுதங்கள் உள்ளதால், இங்கு வழிபடுவதால் சத்ரு பயம் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
Sorry, no posts matched your criteria.