news

News May 13, 2024

ஜெகன் அரசு எதிர்கொள்ளும் 5 பிரச்னைகள் (1)

image

ஆந்திர சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தால், 2ஆவது முறையாக ஜெகன் மோகன் அரசு ஆட்சியமைக்கும். இல்லையேல் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். கடந்தத் தேர்தலில் ஜெகன் மீதான பரிதாப அலை அவரின் அரசு அமைய காரணமாக இருந்தது. ஆனால் இந்த முறை, அவரது அரசு 5 விவகாரங்களில் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது.

News May 13, 2024

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கக் கூடாது

image

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. முன்னதாக நிகழ்ச்சி நடத்த விழுப்புரம் போலீசார் அனுமதி மறுத்ததாக வழக்குத் தொடரப்பட்டது.

News May 13, 2024

பால் கொள்முதலை அமுல் அதிகரிக்கவில்லை

image

கிருஷ்ணகிரியின் போச்சம்பள்ளி தாலுகாவில் பால் கொள்முதலை அமுல் அதிகரித்ததாக வெளியான தகவலுக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பால் கொள்முதலை அமுல் நிறுவனம் அதிகரிக்கவில்லை எனக் கூறிய ஆவின் நிர்வாகம், கிருஷ்ணகிரியில் பால் பொருட்களை உற்பத்தி செய்ய எந்த மையத்தையும் அமுல் நிறுவனம் அமைக்கவில்லை என விளக்கமளித்தது. கிருஷ்ணகிரியில் அமுல் நிறுவனம் 9,000லி பால் கொள்முதல் செய்துவருகிறது

News May 13, 2024

அதானிக்காக அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்த மோடி

image

தொழிலதிபர் அதானி பலனடையவே அக்னிவீர் திட்டத்தை மோடி கொண்டு வந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அக்னிவீர் திட்டத்தை நாட்டில் பிரதமர் மோடியும், அவரது அலுவலகமும் கட்டாயப்படுத்தி திணித்து இருப்பதாக விமர்சித்தார். ராணுவத்தினருக்கான பென்சன், கேண்டின் கான்டிராக்ட் போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அதானிக்கு செல்ல மோடி விரும்புவதாகவும் அவர் கூறினார்.

News May 13, 2024

19 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்

image

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் மழை பெய்யக் கூடும். இதனால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News May 13, 2024

தேர்தல்: 3 மணி நிலவரப்படி 52.60% வாக்குப்பதிவு

image

மக்களவைக்கான 4ஆம் கட்டத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.60% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு இன்று 4ஆவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. காலையில் தேர்தல் தொடங்கியது முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களிக்கின்றனர். மதியம் 3 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 66% வாக்குகள் பதிவாகி உள்ளன.

News May 13, 2024

இந்திய பங்குச்சந்தைகள் ஜுன் 4க்கு பிறகு வேகமெடுக்கும்

image

இந்திய பங்குச்சந்தைகளில் ஜுன் 4க்கு பிறகு வர்த்தகம் வேகமெடுக்குமென்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை 0.7 சதவீதம் சரிந்தது குறித்து பேட்டியளித்த அவர், பங்குச்சந்தைகள் இதற்கு முன்பும் பல முறை சரிவை சந்தித்திருப்பதாகவும், அதனால், மக்களவைத் தேர்தலுடன் அதை தொடர்புபடுத்த வேண்டாம், ஜுன் 4க்கு முன்பு பங்குகளை வாங்கிக் கொள்ளூங்கள் என்றார்.

News May 13, 2024

ஆம் ஆத்மி எம்பியை தாக்கிய கெஜ்ரிவால் உதவியாளர்?

image

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பியும், டெல்லி முன்னாள் மகளிர் ஆணைய தலைவியுமான ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவாலின் உதவியாளர் விபவ் குமார் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் இல்லத்தில் வைத்து அவர் தாக்கப்பட்டதாகவும், இதையடுத்து அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்ததாகவும், பிறகு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த அவர், திரும்பிச் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

News May 13, 2024

நாளை கடைசி: ரயில்வேயில் 4,660 காலிப்பணியிடங்கள்

image

RPFஇல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாளாகும். SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும். <>https://www.rrbapply.gov.in/<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News May 13, 2024

ஆளுநர் மாளிகை உத்தரவு பிறப்பிக்கவில்லை

image

அண்ணாமலை மீது வழக்குத் தொடர அனுமதிப்பது குறித்து, ஆளுநர் மாளிகை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என ராஜ்பவன் விளக்கமளித்துள்ளது. அண்ணாமலை மீது, பியூஸ் மானுஷ் என்பவர் வெறுப்புப் பேச்சு தொடர்பாக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில், மேல்நடவடிக்கைக்கு ராஜ்பவன் அனுமதி அளித்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள ராஜ்பவன், அதுபோன்ற செய்தியில் உண்மை இல்லை எனக் கூறியுள்ளது.

error: Content is protected !!