news

News May 13, 2024

ஒரே நாளில் 7.7 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

image

நாடு முழுவதும் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 7.7 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. குற்ற வழக்குகள் அல்லாத சாதாரண வழக்குகள் தேங்கி கிடப்பதை தவிர்க்க லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான தேசிய லோக் அதாலத் 11 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 2024இல் நடத்தப்பட்ட 2ஆவது தேசிய லோக் அதாலத் இதுவாகும். மேலும், இந்த வழக்குகளில் ரூ.2,733 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News May 13, 2024

நியாயம் வெல்வதை உறுதி செய்வது அதிகாரிகள் கடமை

image

நியாயம் வெல்வதை உறுதி செய்வது அதிகாரிகள் கடமை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் விழாவுக்கு அனுமதியின்றி பேனர் வைத்த விவகாரத்தில் பரமக்குடியில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி 5 பேர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து அரசு அதிகாரிகளும் நியாயத்துக்காக பணியாற்ற வேண்டுமென அரசு எதிர்பார்ப்பதாகவும், அதை லட்சியமாக கொண்டு பணியாற்ற வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.

News May 13, 2024

Prank செய்ததால் மண வாழ்க்கையில் பிரச்னை

image

தனுஷ், ஆன்ட்ரியா மற்றும் தனது கணவர் கார்த்திக் குமார் இணைந்து ‘Prank’ செய்ததால் தான், விவகாரத்து பெற்றதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில், சுசித்ராவின் X தளத்தில் இருந்து, பல சர்ச்சையான கருத்துகள் வெளியாகி தமிழ் சினிமா வட்டாரத்தை கலக்கத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், அதுபோன்று நடந்ததற்கு தனது கணவர் தான் எனக் கூறியுள்ளார்.

News May 13, 2024

பிரதமரின் பேரணியில் 5 ஆயிரம் பெண்கள்

image

நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசித் தொகுதிக்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி வாரணாசியில் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதை முன்னிட்டு, சுமார் 6கிமீ தூரத்திற்கு சாலைப் பேரணி மேற்கொள்ள உள்ளார். இதில் காவி உடை அணிந்த 5 ஆயிரம் பெண்கள் கலந்துகொண்டு பிரதமர் மோடியின் பிரசார வாகனத்திற்கு முன்னாள் அணிவகுத்துச் செல்ல உள்ளனர்.

News May 13, 2024

தனிச் செயலரின் தந்தை மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

image

ஐஏஎஸ் அதிகாரி தினேஷ்குமாரின் தந்தை மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தனது தனிச் செயலாளரின் தந்தை மறைவெய்திய செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தந்தையை இழந்து தவிப்பது எந்தவொரு மகனுக்கும் ஆற்றிட முடியாத துயரம் என்றும் அவர் தனது இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.

News May 13, 2024

4ஆம் கட்டத் தேர்தலில் 63.04% வாக்குகள் பதிவு

image

4ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் மொத்தம் 63.04% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் 76.02%, மத்திய பிரதேசத்தில் 69.16%, ஆந்திராவில் 68.20, பிஹாரில் 55.92 %, ஜம்மு-காஷ்மீரில் 36.88%, ஜார்கண்டில் 64.30%, மகாராஷ்டிராவில் 52.93%, ஒடிசாவில் 64.23%, தெலங்கானாவில் 61.59%, உத்தர பிரதேசத்தில் 58.02% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

News May 13, 2024

தொழிலாளர் மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், தொழிலாளர் மேலாண்மை படிப்பில் சேருவதற்கு மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநரகம் தெரிவித்துள்ளது. +2 முடித்த மாணவர்கள் பட்ட, பட்ட மேற்படிப்பு, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ₹200, SC/ST மாணவர்களுக்கு ₹100 கட்டணம். மதிப்பெண், அரசு விதிகள்படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

News May 13, 2024

மருத்துவ பரிசோதனை தொழிலுக்கு வரும் ரிலையன்ஸ்

image

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், நெட்மெட்ஸ் என்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனத்தை தற்போது நடத்தி வருகிறது. இதையடுத்து, ₹12,52,740 கோடி புழங்கும் மருத்துவ பரிசோதனை தொழிலில் கால்பதிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், நாடு முழுவதும் மருத்துவ பரிசோதனை நிலையங்களை நடத்திவரும் ஏதேனும் ஒரு நிறுவன பங்குகளை ₹1000 கோடி-₹3000 கோடிக்கு வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

News May 13, 2024

அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு தேதி வெளியானது

image

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியானது. அதில் நாட்டிலேயே அதிகபட்ச மதிப்பெண் (99.91) திருவனந்தபுரத்தில் பதிவாகியுள்ளது. விஜயவாடாவில் 99.0%, சென்னையில் 98.47% மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இந்நிலையில், 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்.15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

ஆந்திர தேர்தலில் வாக்களித்த சென்சு பழங்குடியினர்

image

ஆந்திராவில் இன்று மக்களவைத் தொகுதிகளுக்கும், மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதையொட்டி தேர்தல் ஆணையத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாகர்குர்னூலில் வாழும் சென்சு பழங்குடியின மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச் சாவடிகளை அவர்கள் வசிப்பிடம் அருகிலேயே தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது. அதனால் அவர்கள், அந்த சாவடிகளிலேயே வாக்களித்தனர்.

error: Content is protected !!