India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தலில் மோடி 6 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்கக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதாகவும், தேர்தல் விதிகளை மீறுவதாகவும் குற்றம்சாட்டி பாத்திமா என்பவரால் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகும்படி கூறி விசாரிக்க மறுத்தனர். இதையடுத்து மனுவை மனுதாரர் திரும்ப பெற்றார்.
காஞ்சிபுரம், சேலம், சிவகங்கை, பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோடை வெயிலால் தவித்து வந்த மக்கள், வெப்பம் தணிந்து நிம்மதியடைந்துள்ளனர். இதனிடையே, தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் தனது கணவரிடம் ₹5க்கு குர்குரே பாக்கெட் தினமும் வாங்கி வர கூறியுள்ளார். ஆனால் கணவர் மறந்ததால் தாய் வீடு சென்ற அவர், போலீசில் புகார் அளித்த கையோடு விவாகரத்து பெற்றுத் தரக் கேட்டுள்ளார். இதைக்கேட்ட போலீசார், திருமண பந்தத்தை காக்கும் நோக்கில், 2 பேரையும் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
காங்கிரஸ் தொடங்கிய பெரிய திட்டங்களை எல்லாம் பாஜக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் உருவாக்கியதை விட, 10 ஆண்டுகளில் பாஜக உருவாக்கியதுதான் அதிகம் என மோடி கூறிவருவதாகத் தெரிவித்த பிரியங்கா, கடந்த 70 ஆண்டுகளில் காங்., உருவாக்கியதை எல்லாம் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார் என சாடியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் பலியாகினர். கோதுமை மாவு விலை, மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றை குறைக்கக்கோரி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் அரசு 23 பில்லியன் நிதி ஒதுக்கியதால் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடந்த 2018இல் சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிடவில்லை எனக்கூறிய எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
பொது இடமாறுதலுக்காக ஆசிரியர்களால் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடக்க உள்ளது. இதற்கு, மே 17க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு, விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.
ரேபிஸ் என்பது மரணத்தை தரக்கூடிய கொடிய வைரஸ் ஆகும். இது மனிதன் உட்பட பாலூட்டிகளை மட்டுமே தாக்கக்கூடியது. அதுவும் WHOவின் தகவல்படி, இந்தியாவில் ரேபிஸால் ஏற்படும் இறப்பு அதிகமாக உள்ளது. அந்தவகையில், நாய் மட்டுமல்ல, பூனை, குரங்கு, முயல், அணில் மற்றும் குதிரை ஆகிய விலங்குகளும் ரேபிஸை கடத்தக்கூடும். அதனால், இந்த விலங்குகளிடமும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும்.
இந்திய திரைப்பட இசைத்துறையில் “ராஜா”வாக திகழ்பவர் ‘இசைஞானி’ இளையராஜா. இவர் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் மே 14 1976இல் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படம் வெளியானபோது ராஜா என்ற பெயரில் ஒரு இசையமைப்பாளர் இருந்ததால் பஞ்சு அருணாச்சலம், இளையராஜா என்ற பெயரை இசைஞானிக்கு சூட்டினார். அந்தவகையில் இளையராஜா தமிழ் சினிமாவிற்கு வந்து இன்று 48 ஆண்டுகள் ஆகிறது.
ராகுல் காந்தியை பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இந்திய அரசியலின் ஹீரோ என புகழ்ந்ததாக செய்தி வைரலாகி வருகிறது. அது உண்மையா என்று Fact Check செய்தபோது, “அவாத் பூமி” பத்திரிகை செய்தி எனத் தெரிந்தது. இதையடுத்து, அதன் இணையதளத்தில் பார்த்தபோது, அந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையான நிலையில், அத்வானி ராகுலை அவ்வாறு சொல்லவில்லை, செய்தியை நீக்கிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.