news

News May 14, 2024

270 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது

image

நடந்து முடிந்த நான்கு கட்ட வாக்குப்பதிவில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், 380 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளதாகவும், அதில், 270 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமர் மோடி அறுதிப் பெரும்பான்மையை அடைந்துள்ளதாகவும் கூறினார். அத்துடன், 400ஐ தாண்டுவதே நம் முன்னால் உள்ள இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.

News May 14, 2024

உணவு சாப்பிட்டவுடன் காபி, டீ குடிப்பது நல்லதா?

image

சிலருக்கு சாப்பிட்டபின் காபி, டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். அவர்களை மனதில் வைத்து ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காபி, டீயில் இருக்கும் டானின், சாப்பிடும் உணவில் இருந்து இரும்புச் சத்தை எடுத்து கொள்ளும் உடலின் திறனை குறைத்து விடும், ஆதலால் உணவு சாப்பிட ஒரு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகும் காபி, டீ குடிக்க வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 14, 2024

கடும் நடவடிக்கை எடுக்க கெஜ்ரிவால் உத்தரவு

image

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் உதவியாளரால் அவரது இல்லத்தில் தாக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய அக்கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், நேற்றிரவு முதல்வர் இல்லத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், இதுகுறித்து ஸ்வாதி போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார். மேலும், இச்சம்பவம் குறித்து அறிந்த கெஜ்ரிவால், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News May 14, 2024

WC: பாண்டியாவை சேர்த்ததை ரோஹித் விரும்பவில்லை!

image

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து அணித் தேர்வு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் மற்றும் ரோஹித் இருவரும் பாண்டியாவை அணியில் சேர்க்க விரும்பவில்லை என்றும், மேலிட அழுத்தம் காரணமாகவே அவரை அணியில் சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் பாண்டியா சரியாக ஆடாததே இதற்கு காரணமாக் கூறப்படுகிறது.

News May 14, 2024

நாளை கடைசி: தமிழக அரசில் 6,553 பணியிடங்கள்

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு <>https://www.trb.tn.gov.in/<<>> என்ற இணையதளத்திலும், மருத்துவப் பணியிடத்திற்கு https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

News May 14, 2024

கே.எல்.ராகுலை கட்டியணைத்த கோயங்கா

image

SRHக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் LSG அணி படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து, மைதானத்தில் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல்.ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தினார். இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராகுலை நேற்றிரவு விருந்துக்கு அழைத்த கோயங்கா, அவரை கட்டியணைத்து வரவேற்றுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

News May 14, 2024

₹10 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

image

புதுக்கோட்டையில் ₹10 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து கடல் வழியே படகில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி சென்ற படகை மறித்து அவர்கள் சோதனை நடத்தினர். இதில் ₹10 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

News May 14, 2024

சிலிண்டர் வைத்துள்ள மூத்த குடிமக்களின் வசதிக்காக

image

சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஏஜென்சிகளுக்கு சென்று ரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்களின் வசதிக்காக, மொபைல் செயலி மூலம் வீட்டிலேயே முகம் பதிவு செய்யலாம் என ஆயில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியர்கள் மூலம், முகத்தை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ளலாம்.

News May 14, 2024

ஆம் ஆத்மி பெயரை சேர்க்க உள்ளோம்

image

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயரை சேர்க்க இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தற்போது இடைக்கால ஜாமினில் உள்ளார். இதனிடையே, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரிய வழக்கு விசாரணையில், ஆம் ஆத்மி பெயரை சேர்க்க உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு கூறியுள்ளது.

News May 14, 2024

இதற்குப் பெயர்தான் சமத்துவமா?

image

கிரிக்கெட்டில் ஆண், பெண் சமத்துவத்திற்காக ஊதியத்தை உயர்த்துவது நல்லது என்றாலும், பல விஷயங்களில் ஒருசார்பாக இருப்பது கவலையளிக்கிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆஷா ஷோபனாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஒரே ஒரு பத்திரிகையாளர் மட்டுமே கலந்துகொண்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!