India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்கின் விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 2015இல் மணல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவின் கீழ் சிவசங்கர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்துவருகிறது.
சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. இப்படம் உறுதி செய்யப்பட்டால், ஜி.வி.பிரகாஷ் இதற்கு இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. துருவ் விக்ரம், தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தேர்தல் பிரசாரத்துக்கு பேக்குகளில் கட்டுக் கட்டாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா பணம் கொண்டு வந்ததாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், வாக்காளர்களுக்கு கொடுக்க டெல்லியிலிருந்து 5 பேக்குகளில் நட்டா பணம் கொண்டு வந்ததாகவும், அவரிடம் சோதனை நடத்தினால் உண்மை நிருபணமாகும் என்றும் தெரிவித்தார். விசாரணை அமைப்புகள் வெளிப்படையாக நட்டாவுக்கு உதவுவதாகவும் அவர் கூறினார்.
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்தார். இதனால், மற்ற மாவட்டங்களிலும் அதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் ஜூன் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத மணல்குவாரி வழக்கு விசாரணைக்காக சென்னையில் உள்ள ED அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று நேரில் ஆஜராகினர். மணல் குவாரிகள் மூலம் ₹36 கோடி வருவாய் வந்திருப்பதாக மாநில அரசின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ₹4,730 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக ED குற்றம்சாட்டுகிறது. இதில் அனுப்பப்பட்ட சம்மன்களை ஏற்று, திருச்சி, தஞ்சை, வேலூர், கரூர், அரியலூர் ஆட்சியர்கள் நேரில் ஆஜராகினர்.
கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து ED பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், 9 முறை சம்மன்கள் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, இந்தக் காரணத்திற்காகவும், விசாரணை அதிகாரியிடம் இருந்த ஆதாரத்தின் அடிப்படையிலுமே கைது செய்யப்பட்டுள்ளார் என்று ED தெரிவித்துள்ளது.
பாஜகவை திருப்திப்படுத்தவே தேர்தலை 7 கட்டங்களாக நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். அஸ்கிராமில் பிரசாரம் செய்த அவர், வழக்கமாக மே 3ஆம் தேதியில் பொதுத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்ப அலை வீச்சுக்கு மத்தியிலும் பாஜகவை வீழ்த்த வேண்டுமென போராடுகிறோம் என்றார்.
2010ஆம் ஆண்டு இதே நாளில், சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. மும்பைக்கு எதிரான இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சுரேஷ் ரெய்னாவின் (57*) அதிரடியான ஆட்டத்தால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 168/5 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 146/9 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அமித் ஷாவுக்கு சரத் பவார் கேள்வியெழுப்பியுள்ளார். மத்தியில் வேளாண் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நேரிட்ட விவசாயிகள் தற்கொலைக்கு சரத்பவார் மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சரத் பவார், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதைத்தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அவர் முதலில் பதிலளிக்க வேண்டுமென கோரியுள்ளார்.
போர், டெலிவரி என அனைத்திலும் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதை கண்டுபிடித்தது யார் தெரியுமா? ஈராக்கில் 1937இல் பிறந்து, பிறகு இஸ்ரேலில் குடியேறிய யூதரான ஆபிரஹாம் கரேம்தான் அதனைக் கண்டுபிடித்தார். 1973இல் இஸ்ரேல்- அரேபிய நாடுகள் இடையேயான போரின் போது ட்ரோனை கண்டுபிடித்தார். பிறகு அவர் அமெரிக்காவில் குடியேறினார். இந்த கண்டுபிடிப்புக்காக, ட்ரோன் தொழில்நுட்ப தந்தை எனப் போற்றப்படுகிறார்.
Sorry, no posts matched your criteria.