India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது. அமலாக்கத்துறை கால தாமதப்படுத்தவே அவகாசம் கோருவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிக VFX காட்சிகள் இருந்ததால், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியவில்லை. அதேசமயம், தனுஷின் ‘ராயன்’ படமும் ஜூனில் வெளியாவதால், படம் வெளியாவது தள்ளிப் போனது. தற்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. திறந்தவெளி கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் 100 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பு சுவரில் அமர்ந்து சிலர் கிணற்றில் மலம் கழித்ததாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் சம்பவத்திற்கே முடிவு கிடைக்காத நிலையில், அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரிடம் வேட்புமனுவை பெற்ற தேர்தல் அதிகாரி ராஜலிங்கம் தமிழர் ஆவார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இவர், 2006ல் ஐபிஎஸ் தேர்வில் வென்று உ.பி. அலிகரில் பணியை தொடங்கினார். தொடர்ந்து, மீண்டும் குடிமைப் பணி தேர்வெழுதி 2009இல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், மோடியின் அபிமானத்தை பெற்றவர் ஆவார்.
பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து, மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கூகுள் சர்ச்சில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம், அடுத்த மாதம் மற்ற நாடுகளுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பயனர்கள் தேடும் கேள்விகளுக்கு AI சுருக்கமான பதிலை முதல் பக்கத்தில் காண்பிக்கும்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய சாதனை படைத்துள்ளார். 6 Four, 5 Six என விளாசிய அவர் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். இதனால், டி20 போட்டிகளில் அதிகமுறை 50+ ரன்களுக்கு மேல் குவித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். 1. பாபர் அசாம்-39, 2.விராட் கோலி-38, 3.ரோஹித் ஷர்மா-34, 4.முகமது ரிஸ்வான்-29 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
பள்ளி மாணவர்களின் தகவல்களை பதிவு செய்யும் EMIS இணையதளம் திடீரென முடங்கியது. தமிழக மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பெறுவது, இட மாறுதலுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை EMIS இணையதளம் வழங்கி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிக மாணவர்கள் இணையத்தை பயன்படுத்தியதால் முடங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், பள்ளி மாணவர்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து, பிரபல டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த ஷியாம் ரங்கீலா, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். பிரதமர் மோடியை போல மிமிக்கிரி செய்து கவனம் ஈர்த்த அவர், தற்போது அவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் ₹7 சொத்து மதிப்புடன் ஒருவர் களத்தில் இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆந்திராவின் பபாடியா தனித் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வெறும் ₹7 மட்டுமே சொத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்தபடியாக, மகாராஷ்டிராவின் பீம்சேனா வேட்பாளர் சந்தோஷ் உபாலே, ₹83 சொத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ தோல்வியை தழுவியதால் சிஎஸ்கே அணிக்கு ப்ளே-ஆஃப் வாய்ப்பு எளிதாகியிருக்கிறது. மே 18ஆம் தேதி நடைபெறும் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் நிச்சயமாக ப்ளே-ஆஃப் செல்லலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. தோற்றாலும், ரன்-ரேட் வித்தியாசத்தில் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. வெல்லுமா CSK?
Sorry, no posts matched your criteria.