India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹிமாச்சலின் சம்பா மாவட்டத்தில், இன்று அதிகாலை 3:27 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. ஏற்கனவே குலு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேநேரம், பாகிஸ்தானிலும் காலை 2:38 மணிக்கு 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக NCS கூறியுள்ளது.
CM, அமைச்சர்கள் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தாலே ‘பதவி நீக்கம்’ செய்யும் புதிய சட்டத்தை லோக் சபாவில் அமித்ஷா இன்று அறிமுகம் செய்கிறார். முறைகேடு புகார்களில் செந்தில் பாலாஜி, கெஜ்ரிவால், சோரன் உள்ளிட்டோர் ED-யால் கைதாகி சிறைக்கு சென்றனர். ஆனால், அவர்களின் பதவி பறிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதித்தால் மட்டுமே பதவி பறிக்கப்படும். இந்நிலையில், இந்த புதிய சட்டம் அறிமுகமாகிறது.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாகக் கூடாது என்ற திருமாவளவன் கருத்துக்கு கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியாக இருப்பதால் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை ஆதரிப்பது தவறு என்றும், தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் ஆக்கக் கூடாது என்று சொல்வது அதிமேதாவித்தனம், அற்பத்தனம், அரைவேக்காடு தனம், கொத்தடிமையிலும் கொத்தடிமைத்தனம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘கூலி’ படம் பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டி வருகிறது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய AR முருகதாஸ், ரசிகர்கள் சில எதிர்பார்ப்புகளுடன் உள்ளதாக கூறினார். ரஜினிக்கான மாஸ் குறையாமல், லோகேஷ் திரைக்கதையில் படம் வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். லோகேஷின் திரைக்கதையை கமலுக்கு ஃபிட் செய்யலாம், ஆனால் ரஜினிக்கு அதைச் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு இன்று (ஆக.20) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளையொட்டி திருவட்டார், விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய வட்டங்களுக்கு விடுமுறை என கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில், செப். 13-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறவுள்ள தவெக மாநாட்டு மேடையில் அண்ணாதுரை, MGR படங்களுடன் விஜய் படமும் இருந்தது பேசுபொருளாகியது. இதற்கு அதிமுக எதிர்ப்பும் தெரிவித்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தவெக துணை பொதுச் செயலாளர் CTR நிர்மல்குமார், அவர்கள் இருவரும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பொதுவான தலைவர்கள் என்று விளக்கமளித்துள்ளார். இதனால் யாருக்கும் இடையூறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மழைக்கால வீசும் ஈர காற்றில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பவரா நீங்கள்? உங்களுக்காக அருமருந்து இதோ: வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சித்தரத்தை, ஆடுதொடா இலையை சம அளவு எடுத்து வறுத்து, இடித்து பொடியாக்கி அதை கொதிக்கும் நீரில் போட்டு இறக்கிவிட்டு தேன் கலந்து குடியுங்கள் போதும். சளி தன்னால் நீங்கிவிடும். அத்துடன் உடலுக்கு புத்துணர்வும் வரும். SHARE IT.
நல்ல பார்மில் இருக்கும் ஷ்ரேயஸ் ஏன் தேர்வு செய்யவில்லை என அஸ்வின் BCCI-யிடம் கேள்வி எழுப்பியுள்ளார். IPL-ல் கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இடம் கிடைக்காதது மிகவும் அநியாயமானது என்ற அவர், கில் நல்ல பார்மில் இருக்கிறார் என்றால், ஷ்ரேயஸும் ஓரளவு நல்ல பார்மில் தானே இருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஷ்ரேயஸுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கணுமா?
மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், பாஜக முன்னாள் கரூர் தெற்கு மாநகர தலைவர், அதிமுக கரூர் தெற்கு மாநகர ஐடி விங் துணை செயலாளர் உள்ளிட்ட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு திமுக அடையாள அட்டையை வழங்கி, தேர்தல் பணி மற்றும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை தீவிரப்படுத்த செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.
✦இது வயிறு, தொடை, இடுப்பு, தோள்பட்டை & கழுத்து தசைகளை வலிமைப்படுத்துகிறது.
➥தரையில் கால்களை நேராக நீட்டி, முதுகை நேராக வைத்து உட்காரவும்.
➥முதுகு நேராக வைத்து, கால்களை மெதுவாக மேலே உயர்த்தி,
கைகளை முன்னோக்கி நீட்டவும்.
➥இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்து, விட்டு பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
Sorry, no posts matched your criteria.