news

News May 15, 2024

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு

image

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <>https://www.dge.tn.gov.in/<<>> இந்த இணையதளத்தில் அறியலாம்.

News May 15, 2024

மே 19ஆம் தேதி வரை கால அவகாசம்

image

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான போட்டித்தேர்வு ஆக.4ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 28 முதல் தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், இத்தேர்வுக்கு இன்று வரை விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பத்தை திருத்தம் செய்ய மே 19 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

IPL: ராஜஸ்தான் அணி பேட்டிங்

image

கவுகாத்தியில் இன்று நடைபெறும் 65ஆவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஏற்கெனவே RR அணி ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ள நிலையில், PBKS அடுத்த சுற்றுக்கு தகுதி இழந்து வெளியேறியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்?

News May 15, 2024

2029 வரை மோடியே பிரதமராக தொடர்வார்: அமித் ஷா

image

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின், ஏதோ வழக்கமான தீர்ப்பு அல்ல என்றும், சிறப்பு கவனிப்பு என நாட்டில் பலரும் நம்புவதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு கெட்ட செய்தி இருப்பதாக கூறிய அவர், 2029 வரையும், அதன்பின்பும் பிரதமர் மோடி தான் தங்களை வழிநடத்துவார் எனவும் தெரிவித்தார். முன்னதாக, அமித் ஷாவே அடுத்த பிரதமராக்கப்படுவார் என கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

News May 15, 2024

ஜீன்ஸ் போடும் ஆண்களுக்கு இந்தப் பிரச்னை வருமா?

image

அன்றாட வாழ்க்கையில் ஆண்கள் சாதாரணமாகச் செய்யும் சில காரியங்கள், அவர்களுடைய ஆண்மையைக் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அழகுக்காக ஆண்கள் அணியும் இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட், உள்ளாடைகள் ஆண்களின் பிறப்புறுப்பில் ரத்த ஓட்டத்தை குறைத்து, அதனை மரத்துப்போக செய்யும். இதனால், விந்துப்பைகளின் வெப்பநிலை அதிகரிப்பதோடு, விந்தணுக்கள் உற்பத்தியைக் குறைத்து ஆண்மைக்குறைவும் வரும் என்று எச்சரிக்கின்றனர்.

News May 15, 2024

எஃப்ஐஐகள் என்ன நினைக்கிறார்கள்? – 1/2

image

தேர்தல் முடிவுகள் குறித்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) எதிர்மறையான பார்வையைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். முதல் மூன்றுகட்ட வாக்குப்பதிவுகளில் வாக்கு சதவீதம் குறைந்ததால் அவர்களின் கருத்து வலுப்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஏப்.,1 முதல் இன்றுவரை $4 பில்லியன் மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் குறுகிய நிலை ஒப்பந்தங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

News May 15, 2024

குறுகிய காலத்தில் லாபம் ஈட்ட எண்ணும் FII! – 2/2

image

அதாவது, நிகர குறுகிய நிலை ஒப்பந்தங்கள் (ஷார்ட் பொசிஷன் ) 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2,13,224-ஐ எட்டியுள்ளது. பங்கு மதிப்பு குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில், ஒரு தரகரிடம் இருந்து கடன் வாங்கிய பங்குகளை மற்றொரு நபருக்கு விற்று, பின் அதே அளவு பங்குகளை மீண்டும் வாங்கி தரகரிடம் ஒப்படைப்பதே ஷார்ட் பொசிஷனாகும். இதே தந்திரத்தின் மூலம் FIIகள் லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

News May 15, 2024

சூர்யா படத்தில் இணைந்த சந்தோஷ் நாராயணன்

image

தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்துவரும் சூர்யா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் #சூர்யா44 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று சந்தோஷ் நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப் படுத்தியுள்ளது. சூர்யா – சந்தோஷ் நாராயணன் இணைவது இதுவே முதல்முறை.

News May 15, 2024

ராகுல் பிரதமரா? மழுப்பலாக பதிலளித்த அகிலேஷ்

image

INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்தி பிரதமராவாரா? என்ற கேள்விக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மழுப்பலாக பதிலளித்துள்ளார். சரியான நேரத்தில் எங்கள் பிரதமர் வேட்பாளர் யாரென்பதைச் சொல்வோம் எனக் கூறிய அவர், முன்கூட்டி எதையும் சொல்ல முடியாது என மழுப்பலாகக் கூறினார். மேலும், பாஜகவுக்கு 140 இடங்கள் கூட கிடைக்காது; மத்தியில் INDIA கூட்டணி ஆட்சி அமைவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.

News May 15, 2024

‘ஓ’ கொஞ்சம் ஸ்பெஷலானது!

image

சமத்துவத்தை வெளிப்படுத்த ‘எல்லோரது உடம்பிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான்’ என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. மனிதனின் (A, B, AB, O) ரத்தப் பிரிவுகளில் ‘ஓ’ மிகவும் ஸ்பெஷலானது. இப்பிரிவு ரத்தம் சிறிதும் ஆபத்தில்லாதது. எனவே மிக அவசரமான சூழலில், ரத்தம் தேவைப்படும் யார் உடலிலும் இந்த ரத்தத்தை உட்செலுத்த முடியும். உலக மக்களில் பாதிப்பேர் ‘ஓ’ ரத்தத்தைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!