news

News May 18, 2024

காமராஜர் ஆட்சியா? கருணாநிதி ஆட்சியா?

image

மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் கட்சி சொல்லிவருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி ஆட்சியமைத்துதான் திமுக. தற்போது, இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அம்முழக்கத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு தேவை காமராஜர் ஆட்சியா? கருணாநிதி ஆட்சியா?

News May 18, 2024

மழையால் தப்பித்த 15 மாவட்டங்கள்

image

கடந்த சில நாள்களாக அதிக வெயில் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் கடுமையாக சரிந்ததால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் தண்ணீர் எடுக்க 15 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்வதால், குடிநீர் சிக்கல் நீங்கியுள்ளது.

News May 18, 2024

ஐந்தாம் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள்

image

நாடு முழுவதும் நன்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களின் 49 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி (ரேபரேலி), ஸ்மிருதி ராணி (அமேதி), ராஜ்நாத் சிங் (லக்னோ), பியூஸ் கோயல் (மும்பை வடக்கு), ஸ்ரீகாந்த் ஷிண்டே (மும்பை வடக்கு) ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஐந்தாம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

ராஜயோகம் தரும் ‘திட்டை’ குரு பகவான்

image

ஒருவருக்கு ‘குரு’ உச்சம் பெற்றுவிட்டால் அவருடைய வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிடும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட குரு பகவானின் முக்கியமான திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த ‘திட்டை’ திருத்தலம்தான் மந்திர ஒலிகள் தோன்றிய இடம் என்று ரிஷிகளால் நம்பப்பட்டது. பக்தர்கள் ஒருமுறை திட்டை கோயிலுக்கு சென்றுவந்தால் யோகம் கிட்டும் என்பது நம்பிக்கை.

News May 18, 2024

3 மாவட்டங்களில் இன்று அதி கனமழை

image

இன்று தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், குமரி, நெல்லை, திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

News May 18, 2024

மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12

image

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடை மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்னல் தாக்குவது, வீடு இடிந்து விழுவது என இதுவரை 12 பேர் பலியாகியிருக்கின்றனர். மேலும் சில நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

News May 18, 2024

கலை, அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம்

image

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணைந்து படிப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்பப் பதிவு தொடங்கிய 12 நாட்களில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் 20ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

News May 18, 2024

IPL தொடரில் இருந்து வெளியேறியது LSG

image

MI-க்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் LSG வெற்றி பெற்றபோதும், ப்ளே ஆஃப்-க்கு முன்னேறாமல் வெளியேறியது. 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்வியுடன் 14 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில் ரன் ரேட் அடிப்படையில் வெளியேற்றப்பட்டது. இதனால், அந்த அணியின் ரசிகர்கள் கவலையடைந்தனர். இன்று CSKக்கு எதிரான போட்டியில் RCB 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் LSG நிலைமை தான் RCBக்கும்.

News May 18, 2024

4 ரயில்கள் ரத்து

image

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி -ராமேஸ்வரத்திற்கு 19ஆம் தேதி காலை 7.05 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு 19ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், காரைக்குடியிலிருந்து திருச்சிக்கு மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ரயில், திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு மாலை 6.20 மணிக்கு புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News May 18, 2024

ரேபரேலி காங்கிரஸ் கட்சியின் சொத்து அல்ல: அமித் ஷா

image

ரேபரேலி தொகுதியை காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மழை, பயல் என ரேபரேலியில் எந்த பாதிப்பு வந்தாலும் மக்களை சந்திக்க வராத காங்கிரஸ் கட்சி எந்த அடிப்படையில் குடும்ப தொகுதி என்று கூறுகிறது என அவர் கேள்வி எழுப்பினார். முன்னதாக உ.பி-யில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தி, ரேபரேலி தொகுதியை காங்கிரஸின் குடும்பத் தொகுதி என கூறியிருந்தார்.

error: Content is protected !!