India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல் என ராகுல் கூறியுள்ளார். ஒடிசாவில் பரப்புரை மேற்கொண்ட அவர், நாட்டில் முதல்முறையாக ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியல் அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் என கூறுவதாக சாடினார். இந்த அரசியலமைப்பே ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கான உரிமைகளை வழங்கியுள்ளதாகவும், உலகில் எந்த சக்தியாலும் இதைத் தொட முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.
தமிழ்நாட்டில் மே 19ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (மே 16) 10 மாவட்டங்களிலும், மே 17, 18 தேதிகளில் 26 மாவட்டங்களிலும், மே 19ஆம் தேதி 28 மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்கள் அடுத்த 5 நாள்களுக்கு கனமழையை பெற இருக்கின்றன. இதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் டிராவிட்டின் பதவி காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், இந்திய அணிக்கு யார் புதிய தலைமை பயிற்சியாளராக வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அந்த வகையில், ஃப்ளெமிங், கம்பீர், ஆண்டி ஃப்ளவர், ஜஸ்டின் லாங்கர், ஷேவாக், ரிக்கி பாண்டிங் ஆகியோர் பிசிசிஐயின் விருப்பப் பட்டியலில் இருப்பதாகவும், இதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முனைப்பு காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த சில நாள்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவர் குவாலியரை ஆட்சிசெய்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், ராஜமாதா என்றே மக்களால் அழைக்கப்பட்டார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிசர், ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <
பிரதமர் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் ₹3.02 கோடி சொத்து உள்ளதாகவும், அதில் 2.86 கோடி (95%) FD வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுதவிர்த்து, பங்குச்சந்தைகளில் எந்த முதலீடுகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. பொதுவாகவே, FD நம்பகமான முதலீடாக கருதப்படுகிறது. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு கேட்கவே வேண்டாம். மோடியின் முதலீடும், FDயின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு போன்ற நம்பிக்கையையே காட்டுகிறது.
தமிழ்நாட்டில் இன்று தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் & கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி போட்டியிடும் வாரணாசியில் தன்னை போட்டியிட விடாமல் தடுத்ததாக அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். “தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? விளம்பரம் செய்து கொள்வதற்காக தேர்தலை பயன்படுத்தாதீர்கள். சமூக ஆர்வலர் என்றால் தமிழ்நாட்டில் சென்று போட்டியிடுங்கள்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளை செலுத்த உதவும் ‘CRED’ என்ற கேட்வே App-ஐ நெட்டிசன் ஒருவர் வறுத்தெடுத்துள்ளார். கிரெடிட் கார்டு கட்டணத்திற்கு ஏற்ப நிறைய கேஷ்பேக்குகள் கிடைக்கும் என நம்பி, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ₹87,000 கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தியுள்ளார். அதற்கு கேஷ்பேக்காக வெறும் ₹1 வந்ததால், இந்த App-ஐ யாரும் பயன்படுத்தாதீர்கள் என்றும், இது ஏமாற்று வேலை என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்புக்குழு ஆய்வு செய்யும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பட்டாசு ஆலை விபத்துகளுக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சரி செய்ய, வருவாய், தீயணைப்பு, தொழிலக பாதுகாப்பு ஆகிய துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.