news

News May 15, 2024

சாலையில் இப்படிக் கூட செய்வார்களா?

image

சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் பைக்கில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் சீண்டிவிட்டு சென்றிருக்கிறார். இதில், அப்பெண் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. பொது இடத்தில் தனியாக செல்லும் பெண்ணை இப்படியெல்லாம் செய்வார்களா என்று இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான நபர்களை என்ன செய்வது மக்களே!

News May 15, 2024

சந்தோஷ் நாராயணன் பிறந்தநாள் இன்று

image

மெல்லிய இசையின் மூலம் தனி முத்திரை பதித்த சந்தோஷ் நாராயணனுக்கு 41ஆவது பிறந்தநாள் இன்று. அட்டக்கத்தி படத்தின்மூலம் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே தடம் பதித்தார். சினிமாவில் கானா பாடல்களை அதிகம் புகுத்திய அவர், ‘அவள், மாயநதி, மோகத்திரை’ மாதிரியான மனதை வருடும் பாடல்களையும் கொடுத்துள்ளார். கபாலி, கொடி மாதிரியான படங்களில் அவரின் BGM தனி ரகம். உங்களுக்கு எந்தப் பாடல் பிடிக்கும்?

News May 15, 2024

பீன்ஸ் விலை ₹200ஐ தொட்டது

image

கோடை வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர் இருப்பு குறைவு ஆகிய காரணங்களால் காய்கறிகளின் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாள்களாக பீன்ஸ் விலை சென்னை கோயம்பேடு மொத்த சந்தையிலேயே ₹200ஐ தொட்டுள்ளது. சில்லரை விற்பனையில் ₹220 முதல் ₹240 வரை பீன்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

News May 15, 2024

பிளஸ் 1 மாணவர்கள் கவனத்திற்கு

image

பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், மறுகூட்டல் & விடைத்தாள் நகல் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் எழுதிய மையங்கள் மூலமாக இன்று முதல் மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோருபவர்கள், அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத் தேர்வுகள் நடைபெறும்.

News May 15, 2024

பிள்ளைகளை கவனியுங்கள் பெற்றோர்களே

image

நடப்பு ஆண்டு +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் 137 பேர் தற்கொலைக்கு முயலலாம் என்று தமிழக அரசு கண்டறிந்துள்ளது. தொலைப்பேசி மூலம் அவர்களுடன் பேசியதில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். பிள்ளைகளை மனநிலையை பெற்றோர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

News May 15, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை

image

கோடை காலத்து கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. அந்த வகையில் நேற்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை பதிவானது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் 3.3 செ.மீ., மழையும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 2.7 செ.மீ., மழையும், கோவையில் 2.3 செ.மீ., மழையும் பதிவானது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 2 செ.மீ., மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.

News May 15, 2024

மொத்த விலை பணவீக்கம் மீண்டும் உயர்ந்தது

image

இந்தியாவின் சில்லரை பணவீக்கம் சற்று குறைந்த நிலையில் மொத்த விலை பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 1.26 சதவீதமாக பதிவாகியுள்ளது. மார்ச் மாதத்தில் இது வெறும் 0.53 சதவீதமாக இருந்தது. கொரோனாவுக்கு பின் தொடர்ந்து உயர்ந்துவந்த பணவீக்கம் சமீபமாக குறைந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News May 15, 2024

குழந்தைகளுக்கு அறிவாற்றல் அருளும் சுவாமி மலை

image

முருகனின் நான்காம் படைவீடு என்பது சுவாமி மலை ஆகும். இது முருகனின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்க, பிள்ளையை குருவாக ஏற்று சிவபெருமான் சீடனாக அமர்ந்த இடம். அதனால், முருகன் சிவகுருநாதன் என்று அழைக்கப்படுகிறார். இவரைச் சென்று வணங்கினால், அறிவாற்றல் பெருகும் என்பது ஐதிகம். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் பெற்றோர், அவர்களை அழைத்துச் சென்று வணங்குவது சிறப்பு தரும்.

News May 15, 2024

கட்டணத்தை ₹1000ஆக குறைத்தது அரசு

image

தற்போதைய நடைமுறையின்படி, நிலம் அல்லது வீட்டினை கிரையம் செய்துவிட்டால் அதனை ரத்து செய்ய மீண்டும் 9% முத்திரைத்தாள் வரி செலுத்த வேண்டும். அல்லது, ₹50 செலுத்தினால் கிரையம் ரத்து என்று முத்திரை மட்டும் குத்தப்படும். இந்த முறையை எளிதாக்க ₹1000க்கு புதிய முறையை பத்திரப் பதிவுத்துறை கொண்டுவந்துள்ளது. அதன்படி, இனி ₹1000க்கு கிரையத்தை ரத்து செய்து புதிய பத்திரங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

News May 15, 2024

நீண்ட ஆயுளுக்கான உணவு ரகசியம்

image

ஜப்பானில் உள்ள தீவுகளில் நீண்ட காலம் வாழ்பவர்களின் உணவுப் பழக்கம் குறித்த ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, 100 வயதைக் கடந்தவர்கள் உட்கொள்ளும் 90% உணவுகள், அவர்களின் வீட்டுக்கு 10 கி.மீ. சுற்றளவில் கிடைப்பவையாக உள்ளன. கிழங்குகள், காய்கறிகள், தானியங்களை அதிகம் உட்கொள்கின்றனர். மீன், செம்மறி ஆட்டுப்பால், வாரத்திற்கு 3 முட்டை சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!