news

News May 16, 2024

சிலிண்டரை பரிசோதிப்பது எப்படி?

image

உதாரணமாக, சிலிண்டரில் A2024 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம். A-என்பது ஜனவரி-மார்ச்,B-ஏப்ரல்-ஜூன், C-ஜூலை-செப்டம்பர், D-அக்டோபர்- டிசம்பர் குறிக்கக்கூடிய காலக்கட்டங்கள் ஆகும். இதன்மூலம் சிலிண்டர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். பரிசோதிக்கப்பட்ட பின் அடுத்த சோதனைக்கான தேதி சிலிண்டரில் ஒட்டப்படும்.

News May 16, 2024

ஜார்க்கண்ட் அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை

image

பணமோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரின் தனிச் செயலாளர் வீட்டு வேலைக்காரரிடம் இருந்து ரூ.35 கோடியை ED அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் அமைச்சரிடம் 10 மணி நேரம் ED அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு அவரை நள்ளிரவில் கைது செய்தனர்.

News May 16, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News May 16, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ சென்னையில் பரவலாக மழை
➤ பாஜக நிச்சயம் படுதோல்வியை சந்திக்கும் – கெஜ்ரிவால்
➤ இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம்- ராஜ்நாத் சிங்
➤ INDIA கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்போம் – மம்தா
➤ ஒடிசாவில் பாஜக ஆட்சி அமையும் – ஓம் பிர்லா
➤ ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வெற்றி

News May 16, 2024

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி?

image

தெலுங்குப் படவுலகின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கவுள்ள ‘எஸ்விசி59’ என்ற புதிய படத்தில் சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிக்கும் இப் படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார். இந்த படத்தின் நடிகர்கள் & இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 15, 2024

சென்னையில் பரவலாக மழை

image

சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, போரூர், வளசரவாக்கம், கிண்டி, அசோக் நகர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், நந்தனம் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இரவு 1 மணி வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

News May 15, 2024

பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி

image

ராஜஸ்தானுக்கு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 144/9 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரியான் பராக் 48 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் அந்த அணி 5 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் சாம் கரண் 63 ரன்கள் எடுத்தார்.

News May 15, 2024

முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பொழியும்?

image

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பொழிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் மே.19ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News May 15, 2024

₹37,599 கோடி வருவாய் ஈட்டிய ஏர்டெல்

image

2023-24 Q4 காலாண்டில், நாட்டின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ₹37,599 கோடியை ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ₹36,009 கோடியாக இருந்த வருவாய் தற்போது 4.4% உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 31% சரிந்து ₹2,072 கோடியாக உள்ளது.

News May 15, 2024

காங்., மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயல்கிறது

image

காங்கிரஸ் நாட்டில் வகுப்புவாத பிரச்னைகளை உருவாக்க நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். காங்., கட்சியால் நாட்டின் வளர்ச்சி பற்றி பேச முடியாது என்ற காரணத்தால், அவர்கள் இந்து – முஸ்லீம் குறித்துப் பேசி இந்தியாவின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என விமர்சித்துள்ளார். மேலும், அவர்களைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பது அவர்களுக்கு வாக்களித்தவர்களின் வளர்ச்சி மட்டும்தான் என்றார்.

error: Content is protected !!