India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்றைய நாளில் ₹5ஐ வைத்து மிட்டாய் வாங்குவதே கடினம். ஆனால், இந்த ₹5 ஒருவரின் வேலையையே பறித்துள்ளது. குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள கிராம அலுவலகத்தில் நவீன் சந்திரா என்ற கம்பியூட்டர் ஆபரேட்டர் ₹5 லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். நில ஆவணங்களை வழங்க ஒவ்வொரு பக்கத்திற்கும் ₹5 பெற வேண்டும் என்ற நிலையில் இவர் ₹10 கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பள்ளி மாணவ – மாணவிகள் பாடப் புத்தகங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் கையேடு புத்தகத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கையேடு புத்தகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரிமோ பேப்பர் விலை, நூல், பசை உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, 6,7,8,9,10,11,12ஆம் வகுப்புகளுக்கான கையேடு புத்தகத்தின் விலை ₹30 வரை குறைந்துள்ளது. இதனால், மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோவை மாவட்டம் பில்லூர் அணை பகுதிகளில் தலா 17 செ.மீ., மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் தேனி மாவட்டம் மஞ்சளாறு பகுதிகளில் தலா 9 செ.மீ., மழையும், தென்காசி மாவட்டம் சிவகிரி மற்றும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிகளில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வெள்ளியின் விலை 18 நாள்களில் கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. மே 1ஆம் தேதி ₹86,500ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ₹96,500ஆக விற்பனையாகிறது. குறிப்பாக இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹4000 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹96.50க்கு விற்கப்படுகிறது.
மாம்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அதைச் சாப்பிடக் கூடாது என பலர் கருதுகின்றனர். ஆனால், அது கட்டுக் கதை எனக் கூறும் மருத்துவர்கள், மாம்பழத்தில் உள்ள சர்க்கரை பிரக்டோஸ் வடிவில் இருப்பதாகவும், அது உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இதனால், அவற்றை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி எடுத்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்கின்றனர்.
தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பருவமழை மே 31ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முன்கூடியே பருவமழை தொடங்கவுள்ளதாகவும், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
CSK – RCB அணிகளுக்கு இடையேயான போட்டி மழையின் காரணமாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் RCB 190 ரன்கள் எடுத்து, CSKவை 172 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். முதலில் பந்து வீசினால் CSKவை 13.1 ஓவரில் வீழ்த்த வேண்டும். 10 ஓவர் போட்டி என்றால், RCB 140 ரன்கள் எடுத்து 122 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். முதலில் பவுலிங் செய்தால் CSKவை 8.1 ஓவரில் சுருட்ட வேண்டும். இன்று எந்த அணி வெற்றிபெறும்?
கோடை மழை மின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் போது பொதுமக்கள் யாரும் மின் கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் தொடக்கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக் கூடாது என்றும், மின் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளைக் கட்டுப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) விதிகளைக் கடுமையாக்கியுள்ளது. இது தொடர்பான விரிவான அறிவிப்பு வரும் மாதங்களில் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே விளம்பர அழைப்புகளுக்கு 160 சீரிஸ் கொண்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல, சேவை சார்ந்த அழைப்புகளுக்கு 140 சீரிஸில் தொடங்கும் எண்களை ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஜூன் 24 காலை 10 மணி முதல் 25ம் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பேருந்து சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.