news

News May 16, 2024

நான் இப்போது சிரிப்பதா? அழுவதா?

image

வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து நகைச்சுவை நடிகர் ஷியாம் ரங்கீலா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஷியாம் ரங்கீலா, மோடிக்கு எதிராக போட்டியிட மனு தாக்கல் செய்த 55 பேரில், 36 பேரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தை நினைத்து சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை என்றும் கூறினார்.

News May 16, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று முக்கிய உத்தரவு

image

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி ஜாமின் கேட்கிறார். இதற்கு, அவர் இன்னும் எம்எல்ஏவாக தொடர்வதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக ED கூறுகிறது. இந்நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News May 16, 2024

CAAவின் கீழ் 300 பேருக்கு குடியுரிமை

image

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த 300 பேருக்கு முதல் முறையாக குடியுரிமை சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியது. மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க CAA வழி வகுக்கிறது. நேற்று குடியுரிமை பெற்ற 300 பேரில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் இந்துக்கள்

News May 16, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ., மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 10.3 செ.மீ., மழை பதிவாகியிருக்கிறது. மயிலாடுதுறையில் 5.1 செ.மீ., அருப்புக்கோட்டையில் 5 செ.மீ., மதுரையில் 4.7 செ.மீ., நாமக்கல், நாகை மாவட்டம் கொள்ளிடம், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் 3 செ.மீ., என மழை பதிவாகியிருக்கிறது. கோவை, குமரி, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் குறிப்பிடும்படியான மழை பெய்திருக்கிறது.

News May 16, 2024

ஆச்சரியங்களை அள்ளித்தரும் சென்னிமலை முருகன்

image

விநாயகருக்கு முதல் பூஜை செய்யப்படும் நிலையில், சென்னிமலை முருகன் கோயிலில் மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். 2 திருமுகங்கள், 8 திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தரும் சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. இந்த கோயிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும். முருகனுக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை என்றும் நம்பப்படுகிறது.

News May 16, 2024

சிங்கப்பூர் பிரதமர் பதவியேற்பு

image

சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார அறிஞர் ‘லாரன்ஸ் வாங்’ பதவியேற்றுக் கொண்டார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரை வளர்ச்சிப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் PAP (Peoples Action Party) கட்சியைச் சேர்ந்தவர்தான் இவரும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த ‘லீ லூங்’ பதவி விலகிய நிலையில் வாங் பிரதமராகியிருக்கிறார். இவரே நிதியமைச்சராகவும் செயல்பட இருக்கிறார்.

News May 16, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் பகல் 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

பல்வேறு மாவட்டங்களில் மழை

image

சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேளச்சேரி, கிண்டி, சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், அரியலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

News May 16, 2024

நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு மாறிவிட்டேன்

image

ஒரே மாதிரியாக நடிப்பது போரடித்துவிடும் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதாக கூறிய அவர், ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கமே தனக்கு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார். எல்லா படங்களுமே நல்ல கதாபாத்திரங்களை கொடுக்க வாய்ப்பில்லை என்றாலும், அதை தேடி பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News May 16, 2024

மாற்றத்தை உணர அதிகாலையில் எழுங்கள்..!

image

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரம் உறங்குவதும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழுவதால், மூளை நரம்புகள் சீராகச் செயல்படும். இதனால், தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், ரத்த அழுத்தம் குறையும். அந்நாளை சிறப்பாக திட்டமிட அதிக நேரம் கிடைக்கும் என்பதால், உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் ஒதுக்க முடியும்.

error: Content is protected !!