news

News May 16, 2024

இந்த மாவட்டங்களில் இனி அடிக்கடி விடுமுறை?

image

கோடை மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை மே 31ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10க்கு பிறகு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பருவமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, நீலகிரி, கோவையில் கனமழை வெளுக்கும் என்பதால், பள்ளி திறப்புக்கு பின்பு இம்மாவட்டங்களுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.

News May 16, 2024

CAAவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

image

CAA சட்டத்தை பயன்படுத்தி முதல் முறையாக 300 பேருக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது மத்திய அரசு. அச்சட்டத்தின் கீழ், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்பதால் பாரபட்சமான சட்டம் என்று எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றனர். இச்சட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சட்டத்தின்கீழ், இலங்கை தமிழர்களும் குடியுரிமை பெற முடியாது. CAA குறித்து உங்களது கருத்தை சொல்லுங்க.

News May 16, 2024

இலங்கையிலும் இனி Phonepe பயன்படுத்தலாம்

image

இந்தியாவின் Fintech நிறுவனமான Phonepe UPI, இலங்கையில் தனது கிளையை தொடங்கியுள்ளது. Phonepe நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால், பயனர்கள் இனி QR code பயன்படுத்தி UPI பரிவர்த்தனை செய்ய முடியும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News May 16, 2024

3 உயிர்களைக் காப்பாற்றிய மகான்

image

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கருணாகரன் (30) மே 11ஆம் தேதி விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர், அவருடைய குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இருவேறு நபர்களுக்கு, கல்லீரல் ஒருவருக்கு என தானம் செய்யப்பட்டது. அனைவரும் நலமாக இருக்கின்றனர்.

News May 16, 2024

சீர் வரிசைப் பட்டியலை தயார் செய்யுங்கள்

image

திருமணத்தின்போது பெறப்பட்ட சீர் வரிசைப் பட்டியலை மணமக்கள் பராமரித்து வைத்திருப்பது அவசியம் என அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வரதட்சனை புகார் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரதட்சணை பற்றிய தவறான குற்றச்சாட்டுகளைத் தடுக்க, பரிசுகளின் பட்டியலைப் பாதுகாப்பது அவசியம் என்றனர். கட்டாயமாக கேட்கப்படாத பரிசுகள், சட்டப்படி வரதட்சணையாக கருத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

முட்டை: ஏழை மக்களின் போஷாக்கு

image

மக்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், போஷாக்கு மிகுந்த உணவாகவும் கோழி முட்டை இருக்கிறது. மிகவும் குறைந்த விலையில் முட்டை கிடைக்கும் என்பதால், எளிய மக்களின் போஷாக்குக்கு முட்டை அத்தியாவசியமாக இருக்கிறது. தற்போது, முட்டையின் சில்லரை விலை ₹7 வரை உயர்ந்திருப்பதால், ஏழைகள், குழந்தைகள் என சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், முட்டை விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

News May 16, 2024

முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

image

கோழி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ₹5.70ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முட்டையின் சில்லரை விலை ₹7 முதல் ₹8 வரை உயர்ந்துள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முட்டை விலை ₹5.80ஐ தொட்டது. தற்போது விலை ₹5.70ஐ தொட்டிருக்கும் நிலையில் விரைவில் வரலாற்று உச்சத்தை தொடும் என்று பண்ணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News May 16, 2024

வேகமாக பரவும் டெங்கு

image

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், தி.மலை, திண்டுக்கல்லில் டெங்கு அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்கவும் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

News May 16, 2024

இன்று தேசிய டெங்கு தினம்

image

டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 16ஆம் தேதி ‘தேசிய டெங்கு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தபட்ச விழிப்புணர்வு இருந்தாலே டெங்குவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். கொசுக்கள் மூலம் மட்டுமே இந்தக் காய்ச்சல் பரவும் என்பதால், கொசுக் கடியில் இருந்து நம்மை பாதுகாப்பதே டெங்குவை தடுக்க முதல் வழி. நம்மைச் சுற்றியுள்ள நீர்த் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

News May 16, 2024

பிரியங்கா சோப்ராவுக்கு முகத்தில் காயம்

image

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதித்து படங்களில் நடித்து வருகிறார். ‘சிட்டாடல்’ என்ற வெப் சீரிஸைத் தொடர்ந்து, ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’ என்ற படத்தில் நடித்து வரும் அவர், முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் துணிச்சலோடு நடிக்கும் அவருக்கு, படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!