news

News May 16, 2024

வேற வழியில ஓட்டிட்டு போங்க

image

மழை வெள்ளம் இருக்கும் பகுதிகளை விடுத்து மாற்று வழியில் அரசுப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து பழுதாகி நின்றது. இந்நிலையில், அனைத்து ஓட்டுநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கும் போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை கவனத்துடன் இயக்க உத்தரவிட்டுள்ளது.

News May 16, 2024

‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

image

கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவித்திருந்த நிலையில், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளராக கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் போட்டியிடுவதால், படத்தின் பணிகள் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.

News May 16, 2024

ட்ரெண்டிங்கில் Happy Retirement Legend ஹேஷ்டேக்

image

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவித்துள்ள நிலையில், X தளத்தில் Happy Retirement Legend என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் கோலி உள்ளிட்ட பிரபலங்களும் அவருக்கு அன்பை பரிமாறியுள்ளனர். தனது சகோதரரை நினைத்து பெருமை கொள்வதாக X பக்கத்தில் கோலி பதிவிட்டுள்ளார். குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.

News May 16, 2024

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே இன்று காலையில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று உருக்கமாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவித்த அவர், காயமடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

News May 16, 2024

பாஜக வென்ற பல இடங்களில் இம்முறை தோற்கும்: கெஜ்ரிவால்

image

பாஜக 220 தொகுதிகளுக்கும் குறைவாகவே வெல்லும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். லக்னோவில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கெஜ்ரிவால், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ.பி., பிஹார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் பாஜக கடந்த முறையை விட, குறைந்த இடங்களே வெல்லும் என பட்டியலிட்டார்.

News May 16, 2024

Virtual கிரெடிட் கார்டை அறிமுகம் செய்தது HDFC

image

இந்தியாவின் நம்பர் 1 தனியார் வங்கியான HDFC, விர்ச்சுவல் கிரெடிட் கார்ட் சேவையினை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார்டுகளை கைகளில் வாங்க முடியாது. ஆனால், கார்டு நம்பர், CVV ஆகியவை உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அதனை பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தலாம். Visa கார்ட் நிறுவனத்துடன் இணைந்து HDFC இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.

News May 16, 2024

EDயின் கைதுக்கு கட்டுப்பாடு

image

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் EDயின் கைதுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க விரும்பினால் ED மனு தாக்கல் செய்ய வேண்டும். அதை ஆய்வு செய்து, குற்றம்சாட்டப்பட்டவரை ED காவலுக்கு அனுப்ப வேண்டுமா, வேண்டாமா என சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபின், நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என அறிவித்துள்ளது.

News May 16, 2024

பொய் சொன்னாரா சவுக்கு சங்கர்

image

சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து நேற்று பெண் காவலர்கள் திருச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதில், சங்கருக்கு காயங்கள் ஏதும் இல்லை என்றும் சவுக்கு சங்கர் பொய் சொல்கிறார் என்று காவல் துறையினர் நீதிபதியிடம் முறையிடவுள்ளனர்.

News May 16, 2024

சுனில் சேத்ரியின் வரலாற்று சாதனைகள்

image

இந்தியா 2007, 2009 மற்றும் 2012 நேரு கோப்பையை வெல்ல உதவியாக இருந்தவர் சுனில் சேத்ரி. 2011, 2015, 2021 மற்றும் 2023 SAFF சாம்பியன்ஷிப் வெல்ல உதவிய அவர், 27 ஆண்டுகளுக்கு பிறகு AFC ஆசிய கோப்பைக்கு தகுதி பெற காரணமாக இருந்தார். அவருக்கு 2011இல் அர்ஜுனா விருது, 2019இல் பத்மஸ்ரீ விருதுகளை அளித்து மத்திய அரசு கெளரவித்தது. கேல் ரத்னா விருது பெற்ற முதல் கால்பந்தாட்ட வீரர் என்ற பெருமையும் 2021இல் பெற்றார்.

News May 16, 2024

மாவட்ட வாரியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

image

தமிழகத்தில் போதைப்பொருள் தலைவிரித்தாடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், போதைப்பொருள் ஒழிப்பில் மாவட்ட வாரியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!