India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 68ஆவது லீக் போட்டி, வரும் 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அங்கு மழை பெய்வதற்கு 45% வரை வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி மழையினால் போட்டி ரத்தானால் RCB அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்கும். அதே சமயம் CSK அணி நேரடியாக ப்ளே ஆஃப் தகுதி பெறும். போட்டி நடக்குமா? ரத்தாகுமா?
சீன இறக்குமதி மீதான வரியை அமெரிக்க அரசு உயர்த்தியுள்ளதால், இருநாட்டு நட்புறவு மோசமடைந்துள்ளது. இந்நிலையில், சீனாவை தளமாகக் கொண்ட தனது பல நூறு ஊழியர்களை அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இடம் மாற பரிசீலிக்குமாறு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இது சர்வதேச வர்த்தக மேலாண்மை நடைமுறையின் ஒருபகுதியே என்றும் மைக்ரோசாஃப்ட் விளக்கம் அளித்துள்ளது.
நள்ளிரவில் துரித உணவு சாப்பிடும் வழக்கம் இளைஞர்கள் மத்தியில், புது கலாச்சாரமாகவே மாறி வருகிறது. குறிப்பாக, இரவு 1 மணி வரை திறந்திருக்கும் உணவகங்களில் பீட்சா, நூடுல்ஸ், மோமோஸ், சிக்கன் ஃப்ரை ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஆனால், இதுபோன்று இரவு மற்றும் விடியற்காலை சாப்பிடும் உணவு செரிமான கோளாறு மட்டுமின்றி ஆயுட்காலத்தையும் குறைக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தன்னைப் பற்றி அவதூறாக பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே ஆளுநர் ரவி மற்றும் குஷ்பூ குறித்து அவதூறாக பேசியதற்காக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராதிகா குறித்து அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், இன்று ராதிகா புகார் அளித்துள்ளார்.
தென்தமிழக கடலோர பகுதிகளுக்கு 5 நாள்களுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலில் இன்று முதல் 20ஆம் தேதி வரை சூறாவளி மணிக்கு 40-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அங்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணிர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 4 நாள்களுக்கு, விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
ரேபரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து சகோதரி பிரியங்கா ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட பொதுமக்களை மோடி நேரில் சந்திக்கவில்லை. ஆனால், தனது பாட்டி இந்திரா காந்தி நடைபயணமாக வந்து மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என்று கூறினார். இந்து-முஸ்லிம்களை வைத்து மோடி அரசியல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து குஜராத்தின் வதோதராவிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான ஊழியர் ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, அங்கிருந்த டிஷ்யூ பேப்பரில் ‘Bomb’ என எழுதி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதிகாரிகளிடம் தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் வேறொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
‘கேஜிஎஃப்’ படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறிய நடிகர் யாஷ் தற்போது ‘டாக்ஸிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. KVN புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம், போதைப் பொருள் கடத்தும் கும்பலை மையப்படுத்திய ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளை நேரலையாக திரையிட PVR Inox நிறுவனம் ஆலோசித்து வருகிறது. நடப்பு ஆண்டில் பெரிய அளவிலான பாக்ஸ் ஆஃபிஸ் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்நிறுவனத்தின் வருவாய் கணிசமாக சரிந்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், டி20 உலகக்கோப்பை போட்டிகளை திரையிட்டால் கிரிக்கெட் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கலாம் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
Sorry, no posts matched your criteria.