news

News April 25, 2025

ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்: அமைச்சர்

image

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷா உடனான ஆலோசனையின் போது இது குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக குறுகிய, நீண்டகால கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நீர் நிறுத்தம் போராக கருதப்படும் என பாக். கூறிய நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News April 25, 2025

ஆக்‌ஷன் விருந்துக்கு ரெடியா மக்களே?

image

‘மிஷன்: இம்பாசிபிள் 8’ படம் இந்தியாவில் வரும் மே 17-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மே 23-ம் தேதி ரிலீசாகும் நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இங்கு ரிலீசாகிறது. 7-ம் பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி தான் இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News April 25, 2025

காஷ்மீர் மீது பழி போடாதீர்: குமுறும் பெண்

image

பஹல்காம் தாக்குதலில் பலியான குஜராத்தைச் சேர்ந்த ஷைலேஷின் மனைவி ஷீதல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. காஷ்மீர் மீது எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லும் அவர், அரசின் பாதுகாப்பு செயல்பாடுகளில்தான் பிரச்னை உள்ளதாக கூறும் அவர், அரசியல்வாதிகள், VIP-களின் பாதுகாப்புக்கு தரும் முக்கியத்துவம், வரிகட்டும் பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிறார். உங்க கருத்து?

News April 25, 2025

T20 வரலாற்றில் 4-வது வீரராக இடம்பிடித்த தோனி

image

டி20-ல் 400 போட்டிகளில் விளையாடிய 4-வது இந்திய வீரராக கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்தார் CSK கேப்டன் தோனி. இன்றைய SRH உடனான போட்டியில் அவர் இச்சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் ரோஹித் ஷர்மா முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 456 டி20-ல் விளையாடியுள்ளார். 412 போட்டிகளில் விளையாடி தினேஷ் கார்த்திக் 2-ம் இடத்திலும், 408 போட்டிகளில் விளையாடி விராட் கோலி 3-ம் இடத்திலும் உள்ளனர்.

News April 25, 2025

சுட்டுக் கொன்றதும் வெடித்து சிரித்த தீவிரவாதிகள்

image

பஹல்காம் தாக்குதலின் போது தீவிரவாதிகள் செய்த கொடூர செயல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. நெற்றியில் இருந்த பொட்டை அழித்து, அல்லாஹு அக்பர் சொன்ன பிறகும் தீவிரவாதிகள் தனது கணவர், அவரது நண்பரை கொன்றதாக தாக்குதலில் கொல்லப்பட்ட புனேவைச் சேர்ந்த கௌஸ்துப்பின் மனைவி சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவரை சுட்டுக் கொன்ற பின் தீவிரவாதிகள் வெடித்து சிரித்ததாக குஜராத்தைச் சேர்ந்த ஷீதல் கூறியுள்ளார்.

News April 25, 2025

ரூ.1000 உரிமைத் தொகை: CM ஸ்டாலின் அறிவிப்பு

image

மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த முகாம்களில், பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று CM ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

News April 25, 2025

SRH-க்கு 155 ரன்கள் இலக்கு

image

SRH-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த CSK, 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆயுஷ் மாத்ரே (30), டெவால்ட் பிரெவிஸ் (42) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடினர். ரஷீத், தோனி, துபே உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். SRH அணியின் பேட்டிங் லைன் அப் வலுவாக இருப்பதால், இந்த இலக்கு போதுமானதாக இல்லை. பேட்டிங்கில் சொதப்பிய CSK, பவுலிங்கில் ஜொலிக்குமான்னு பார்ப்போம்.

News April 25, 2025

டிடிவி தினகரன் மீதான வழக்கு ரத்து

image

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. அதிமுக முன்னாள் MP உதயகுமார் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கையும் நீதிமன்றம் ரத்து செய்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக MP தங்க தமிழ்ச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

News April 25, 2025

டான்செட் – சீட்டா தேர்வு முடிவுகள் வெளியானது

image

டான்செட் – சீட்டா ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலை., வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை <>http://tancet.annauniv.edu/tancet/<<>>-ல் தெரிந்துக் கொள்ளலாம். எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு டான்செட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல் எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சீட்டா மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2025

₹5-க்கு சபரிமலையில் தரிசன டிக்கெட் புக்கிங்!

image

சபரிமலை வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும், அவர்களின் நிவாரணத்திற்காகவும் இனி டிக்கெட் புக்கிங் செய்யும் போது, நிவாரணமாக ₹5-யும் கொடுக்கலாம். ஆனால், இது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2011-ல் புல்லுமேடு பகுதியில் தரிசனத்திற்கு வந்த 102 பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, கோர்ட் உத்தரவின் பேரில் பக்தர்கள் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது.

error: Content is protected !!