India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019இல் பாகிஸ்தான் பொருட்கள் மீதான வரியை இந்தியா 200% அதிகரித்தது. இதனால் இந்தியாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்தவே, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கதேசம் முன்பு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் இதேநிலையே இருந்தது. இதைக் கண்டித்து வங்கதேச மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அதேபோல் தற்போதும் நிகழுமா, இல்லையா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட காரணங்களினால், பாகிஸ்தானில் பணவீக்கம் சுமார் 38% அதிகரித்துள்ளது. இதனால் நிதி நெருக்கடியில் உள்ள அந்நாட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு போதிய நிதி ஒதுக்க முடியவில்லை. நீலம்-ஜீலம் திட்டத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்திலும் சரியான பங்கு அளிக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் நிதி ஒதுக்க முடியவில்லை. இதனால் வேறு நிதியை நிர்வாகத்தினர் செலவிட்டனர்.
காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தனிநாடாக இருந்த ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டது. எஞ்சியப் பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டத்தில் 4 பேர் பலியாகினர். இந்த போராட்டத்திற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
போதைப் பொருள் குற்றவாளிகளுடன் கைகோர்த்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் காவல் அதிகாரிகளை கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், போதை பொருள் நடமாட்டத்தை குறைக்க தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் அடங்கிய ரகசிய குழுவை உருவாக்க உத்தரவிட்டது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டுக்கொண்டு வருவோம் என்று அமித் ஷா கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “பிரிவினையைத் தூண்டும் அரசியலை செய்யும் பாஜக, முதலில் சீனா ஆக்கிரமித்துள்ள 4,000 கி.மீ., தொலைவு நிலப்பகுதியை மீட்டுக் கொண்டு வரட்டும்” எனக் காட்டமாக கூறினார்.
கேரளாவில் 4 வயது சிறுமிக்கு கைகளில் இருந்த 6 விரல்களில் ஒன்றை அகற்ற முடிவு செய்யப்பட்டு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் கைக்குப் பதிலாக வாயில் கட்டு போடப்பட்டிருந்ததைக் கண்டு பெற்றோர் விசாரித்ததில், தவறாக நாக்கில் ஆபரேஷன் நடந்தது தெரிய வந்தது. ஒரே நாளில் 16 ஆபரேஷன் நடந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், விரைவில் ஆறாவது விரல் அகற்றப்படும் என மருத்துவமனை சமாளித்துள்ளது.
கோவை, நீலகிரி, குமரி, திண்டுக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருவதால் கோடைகாலம், குளிர்காலமாக மாறியுள்ளது. இந்த நிலையில், இன்று இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்வதுடன் சாலைகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) கடன் வழங்க பின்பற்றும் அல்காரிதம் அடிப்படையிலான வழிமுறைகளை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஜே.சுவாமிநாதன், “NBFCகள் பலம் & பலவீனங்களை விழிப்புடன் அணுகி, பயனாளியின் தரவை தொடர்ச்சியாக சரிபார்க்க வேண்டும். அத்துடன், விரைவாக கடன் வழங்கும் முறையை கவனமாகப் பின்பற்ற வேண்டும்” என்றார்.
ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவதால் GT – SRH இடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை சற்று குறைந்த பின் டாஸ் போடப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும். ஏற்கெனவே GT அணியின் கடைசிப் போட்டியும் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4 கைகள், 3 கால்களுடன் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகளின் ஒரு கால் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேசின் சமீபத்திய அறிக்கைப்படி, 2018இல் இந்தோனேசியாவில் இந்த குழந்தைகள் பிறந்தன. 20 லட்சம் பேரில் ஒரு குழந்தை இவ்வாறு பிறப்பதாகக் கூறப்படுகிறது. உயிருக்கு போராடி வந்த இந்த குழந்தையின் ஒரு கால் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், அவர்களால் உட்கார முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.