India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
41 வகையான மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்(NPPA) தெரிவித்துள்ளது. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகும். இந்நிலையில், சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் பிரச்னை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை குறைத்துள்ளதாகவும், இந்தத் தகவலை டீலர்கள், ஸ்டாக்கிஸ்டுகளுக்கு மருந்து நிறுவனங்கள் தெரியப்படுத்தவும், NPPA உத்தரவிட்டுள்ளது.
RR அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ரசிகர்களுக்கு, தோனி கையெழுத்திட்ட பந்தை பரிசாக வழங்கியது CSK அணி. தற்போது ரசிகர்களுக்கு மேலும் ஒரு கிஃப்ட் வழங்க உள்ளதாக CSK அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ரசிகர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்தால், ரசிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு CSK வீரர்களின் கையெழுத்துடன் கூடிய புகைப்படம் பரிசளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. <
அதிக லாபம் ஈட்ட பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர், முறையான முதலீட்டுத் திட்டங்களை (SIP) தேர்வு செய்யலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். Stepup SIP எனப்படும் இந்த முறையில் மாதத்திற்கு ₹5,400 என்ற விகிதத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ₹49.67 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதை ஆண்டுக்கு 5% உயர்த்தினால் ₹69 லட்சமும், 15%க்கு ₹1.54 கோடியும் கிடைக்கும் என கூறுகின்றனர்.
P.F. கணக்கிலுள்ள பணத்தை அவசரத் தேவைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தும், நேரடியாக மனு அளித்தும் முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவுத் தொகையோ எடுக்கலாம். முழு பணத்தையும் எடுக்க விண்ணப்ப படிவம் 19, பகுதியளவு எடுக்க விண்ணப்ப படிவம் 31ஐ அளிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க UAN எண், P.F.இல் பதிவு செய்த மொபைல் எண் அவசியமாகும். மருத்துவம், 2 மாதத்துக்கு மேல் பணியில் இல்லாதோர் முழு பணமும் எடுக்கலாம்.
சிறைக்கு சென்றபின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனக் குழப்பத்தில் இருப்பதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், துடைப்பத்தை (ஆம் ஆத்மி சின்னம்) கையில் எடுத்த கெஜ்ரிவால் அதை வைத்து அன்னா ஹசாரேவின் கனவை துடைத்து விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும், மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் அவர் சிறைக்கு சென்ற பின் டெல்லி மக்கள் நிம்மதியாக இருந்தனர் என்றார்.
*உப்பை (2300 மி.கி.,) அளவாக எடுத்துக்கொள்வது, இதயநோய்களை கணிசமான அளவில் குறைக்கும். *அதிகம் பதப்படுத்தப்பட்ட & கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். *ஒரு கிலோ கிராம் எடைக்கு 1.6 கிராம் புரதம் சாப்பிடலாம். *சிறு தானியங்களில் இருந்து கிடைக்கும் கார்போஹைட்ரேட்ஸ் உடலுக்கு நல்லது. *சுறுசுறுப்பாக இருக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். *பருவகால பழங்கள் & காய்கறிகளை தவிர்க்காமல் உண்ண வேண்டும்.
புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தால், 3-7 நாள்களில் இணைப்பு வழங்க தலைமை பொறியாளர்களுக்கு, மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை என தாமதப்படுத்தாமல், 3 நாள்களில் பயனாளர்களுக்கு விவரத்தை தெரிவிக்கவும், 7 நாள்களில் மின் இணைப்பு வழங்கவும் அறிவுறுத்திய மின்சார வாரியம், தவறினால் நாளொன்றுக்கு ₹100 அபராதம் செலுத்த நேரிடும் எனத் தலைமைப் பொறியாளரை எச்சரித்துள்ளது.
இந்தியர்களுக்கு உண்டாகும் நோய்களில் சுமார் 56.4% நோய்கள் தவறான உணவு முறைகளினாலேயே ஏற்படுவதாக ICMR தெரிவித்துள்ளது. 148 பக்கங்கள் கொண்ட அதன் வழிகாட்டுதலில் கூறிய முக்கியமான அறிவுறுத்தல்களைப் பார்ப்போம். *கொழுப்பு அமிலங்களுக்கு நட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். *சரிவிகித உணவுமுறையை பின்பற்றுங்கள் *நாளொன்றுக்கு 25 கிராம் சர்க்கரை மட்டும் உட்கொள்ளுங்கள். *ஊட்டச்சத்துக்கு கடல் உணவுகளை சாப்பிடுங்கள்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்பது குறித்து கோலி பேட்டியளித்துள்ளார். தன்னால் முடிந்த வரை கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும், அதன் பிறகே ஓய்வு பெற விரும்புவதாகவும் கூறிய கோலி, எதையும் செய்ய முடியவில்லை என்று பிறகு நினைத்து வருத்தப்பட விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுக்கு பிறகு தன்னை யாரும் குறிப்பிட்ட காலம் காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
நிலவில் ரயில் நிலையம் அமைக்க ‘Flexible Levitation Track’ என்ற சிறப்பு அமைப்பை நாசா உருவாக்கி வருகிறது. நிலவின் புவி விசையில் ரயிலை இயக்கும் மேக்னடிக் லெவிடேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நிலவில் தூசி & காற்று மாசு அதிகமாக இருப்பதால் ரயில் பாதையில் முதலில் வினாடிக்கு 0.5 மீட்டர் வேகத்தில் பயணிக்கும் மிதக்கும் ரோபோக்களை வைத்து, சோதனை செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.