India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதானி துறைமுக நிறுவனத்தில் முதலீடு செய்வதை நிறுத்தப் போவதாக நார்வே அரசின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2021இல் மியான்மரில் நடந்த ராணுவப் புரட்சியின்போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாகக் குற்றம்சாட்டிய நார்வே அரசு, விதிமீறல் நிறுவனங்களின் பட்டியலில் அதானி நிறுவனத்தைச் சேர்த்துள்ளது. ஏற்கெனவே வாங்கிய அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்கவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. இதுபோன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கெனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும், வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியம் வழங்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் RCB-க்கு எதிரான ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய CSK வீரர்கள்:
▶எம்.எஸ்.தோனி 84*(48) – 2019
▶டேவன் கான்வே 83(45) – 2023
▶அம்பதி ராயுடு 82(53) – 2018
▶சுரேஷ் ரெய்னா 62(35) – 2015
▶ஷிவம் துபே 52(27) – 2023
▶துஷர் தேஷ்பாண்டே 3/45 – 2023
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்த பின், பாஜகவில் இணைந்த அபிஜித் கங்கோபாத்யாய், மம்தா பானர்ஜி குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. சந்தேஷ்காலியின் பாஜக வேட்பாளர் ₹2,000க்கு வாங்கப்பட்டதாக TMC விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலளித்த அபிஜித், அப்படியானால் மம்தாவின் விலை ₹10 லட்சமா எனக் கேட்டதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்., தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உடனான நட்பு குறித்து, விராட் கோலி பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சுனில் சேத்ரி தனது நெருங்கிய நண்பர் என்றும், ஓய்வை அறிவிக்கப் போவதாகத் தனக்கு முன்பே தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், இந்த முடிவு அவருக்கு நிம்மதியை தரும் என்றும், அவர் மிகவும் நல்ல மனிதர், அவருக்கு எல்லாமே சிறப்பானதாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும், ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ( மாதம் ரூ.8,500) வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பட்டியலின சமுதாயத்தை தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோ வெளியானது தொடர்பாக, நடிகர் கார்த்திக் குமார் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தனது முன்னாள் மனைவி சுசித்ராவை கேள்வி கேட்கும் போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாகவும் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பேசியதாகவும் ஆடியோ வெளியானது. ஆனால், அது தனது குரல் அல்ல என அவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மனு அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளம் முதலில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் அமைக்கப்பட இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 1967 திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க அப்போதைய மத்திய அரசு விரும்பியது. அதற்காக இஸ்ரோ தலைவர் விக்ரம் சாராபாய் & சதீஷ் தவானை அன்றைய முதல்வர் அண்ணாவுடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தது.
என்ன செய்ய தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம்? அன்று அண்ணாவுக்கு கடும் தோள்பட்டை வலி ஏற்பட அந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அதன் காரணமாகப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் மதியழகனை அனுப்பி வைத்தார். பல மணி நேரம் இஸ்ரோ குழுவினரைக் காத்திருக்க வைத்த மதியழகன் தள்ளாடிய நிலையில் வந்த முறையற்ற செயலாலும், கோரிக்கைகளாலும் விக்ரம் சாராபாய் வெறுப்படைந்து, கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.
வளர்ச்சித் திட்டம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத தமிழக அரசின் பேச்சுவார்த்தை குழுவால், இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, அப்போதைய ஆந்திர முதல்வர் காசு பிரம்மானந்த ரெட்டியின் விடா முன்முயற்சியால் இஸ்ரோவின் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஒதுக்கப்பட்ட 26,000 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டதாக புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் நம்பி நாராயணன் தன் சுயசரிதையில் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.