news

News May 17, 2024

‘இந்தியன் 2’ வெளியாகும் அதே நாளில் ‘இந்தியன் 3’ ட்ரெய்லர்?

image

நீண்ட நாள்களாக படப்பிடிப்பில் இருந்த ‘இந்தியன்-2’ படம் ஜூலை மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்திற்காக அதிக காட்சிகள் எடுக்கப்பட்டதால் ‘இந்தியன்-3’ படத்தையும் உருவாக்கி வருகிறார்கள். இந்நிலையில், இப்படம் தியேட்டரில் வெளியானதும், படம் முடிந்தபின் இறுதியில் ‘இந்தியன் 3’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.

News May 17, 2024

2 பேரை தவிர அனைவரையும் மும்பை அணி நீக்க வேண்டும்

image

சூரியகுமார் யாதவ், பும்ரா தவிர அனைவரையும் அடுத்த சீசனில் மும்பை அணி கழற்றிவிட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தால் மும்பை முதல் ஆளாக வெளியேறியது. இதுகுறித்து பேட்டியளித்த சேவாக், ஷாருக், சல்மான், அமீர்கான் தனித்தனியே நடித்தால்தான் படம் வெற்றி பெறும். அதுபோல்தான் கிரிக்கெட்டும். ரோஹித், இஷான் ஆகியோர் சரியாக பேட் செய்யவில்லை என விமர்சித்துள்ளார்.

News May 17, 2024

இந்த நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் சோதிக்க முடியாது

image

முன்பதிவு ரயில்களில் மோசடி நடைபெறுவதை தடுக்க பயணிகளிடம் டிக்கெட் உள்ளதா என்பதை சோதிக்க டிக்கெட் பரிசோதகருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டிக்கெட் சோதனையை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குப் பிறகு, சோதனை நடத்த அவருக்கு ரயில்வே விதி அனுமதி தரவில்லை. அதற்கு முன்பே நடத்திவிட வேண்டுமென்று ரயில்வே விதியில் கூறப்பட்டுள்ளது.

News May 17, 2024

இனி வாட்ஸ்ஆப் மூலம் EB கட்டணம் செலுத்தலாம்

image

வாட்ஸ்ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்கள், வாட்ஸ்ஆப் செயலி மூலம் யுபிஐ (UPI) வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம். 94987 94987 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி, அதில் வரும் வழிமுறைகளை பின்பற்றி மின் கட்டணம் செலுத்தலாம். இதன் மூலம், வீட்டில் இருந்தபடியே உங்கள் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள்.

News May 17, 2024

ஏன் பேட்டியளிப்பதில்லை? மோடி விளக்கம்

image

பிரதமராக பதவியேற்றது முதல் ஊடக செய்தியாளர்களுக்கு மோடி இதுவரை பேட்டியளித்ததில்லை. இதுகுறித்து ஆங்கில பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஊடகங்கள் நடுநிலையுடன் இல்லை எனவும், ஊடக செய்தியாளர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் கருத்தியலை மக்களிடையே திணிக்க முயற்சிப்பதாலும், அவர்கள் செல்லும் தவறான பாதையில் தான் செல்ல விரும்பவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

News May 17, 2024

39% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

image

நாடு முழுவதும் நான்கு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்த 3 கட்ட வாக்குப்பதிவுகள் மே 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், மே 25இல் நடைபெறும் ஆறாவது கட்டத் தேர்தலில், மொத்தம் 866 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 338 பேர் (39%) கோடீஸ்வரர்கள் என்பது அவர்களது வேட்புமனு மூலமாக தெரிய வந்துள்ளது. அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ₹6.21 கோடியாக உள்ளது.

News May 17, 2024

பொது இடமாறுதலுக்கான அவகாசம் நீட்டிப்பு

image

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (மே 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது. இதுவரை 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

நீர்வழி வர்த்தகம் எளிதாகும்

image

மேற்கு & மத்திய ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் நீர்வழி வர்த்தகத்தை சாபஹார் ஒப்பந்தம் எளிமையாக்கும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “பிராந்திய அரசியலில் தூதரக ரீதியில் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியா கடல்சார் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்றார்.

News May 17, 2024

IPL: முதல் போட்டியில் எந்தெந்த அணிகள் மோதின தெரியுமா?

image

கிரிக்கெட் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஐபிஎல், 2008இல் தொடங்கியது. இதன் முதல் போட்டி, ஆர்சிபி, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா, 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. மெக்கல்லம் 158 ரன் விளாசினார். இதையடுத்து விளையாடிய ஆர்சிபி, 82 ரன்னில் சுருண்டது. டிராவிட் 2, கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா 140 ரன் வித்தியாசத்தில் வென்றது.

News May 17, 2024

பள்ளிகள் திறப்பு எப்போது?

image

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால், வெயில் வாட்டி எடுத்ததால் பள்ளித்திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாமா என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், இம்மாத இறுதியில் சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

error: Content is protected !!