news

News May 17, 2024

தாமதமாய் செயல்படுத்தப்பட்ட பசுமைப் பந்தல்

image

வெயிலில் இருந்து வாகன ஓட்டிகளை காக்க சென்னையில் டிராஃபிக் சிக்னல்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்த நிலையில், தற்போது வெயில் தாக்கம் தணிந்து, நேற்றும் இன்றும் மழை பெய்வதால், பசுமை பந்தல்களின் நோக்கம் வீணாகி விட்டதாகவும், இதே பந்தலை தாமதிக்காமல் மார்ச்சில் அமைத்திருந்தால் 2 மாதம் நல்ல பயன் கிடைத்திருக்கும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

News May 17, 2024

கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், AAP மீது டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நீதித்துறை வரலாற்றில், மோசடி வழக்கில் அரசியல் கட்சி மீது குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையாகும். இவ்வழக்கில், ஏற்கெனவே 7 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று 8வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News May 17, 2024

பாஜக வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

image

மேற்கு வங்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, திரிணாமுல் காங்., கொடுத்த புகாரின் அடிப்படையில், வரும் 20ஆம் தேதி மாலைக்குள் விளக்கமளிக்க அபிஜித்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News May 17, 2024

IPL: லக்னோ அணி பேட்டிங்

image

இன்று நடைபெறும் 67ஆவது ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டியில் டாஸ் வென்றுள்ள MI அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் LSG அணி பேட்டிங் செய்ய உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து MI ஏற்கெனவே வெளியேறியுள்ள நிலையில், இன்று LSG அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் ப்ளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News May 17, 2024

கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில், அமலாக்கத்துறை பல்வேறு கதைகளை சொல்வதாக வாதிடப்பட்டது. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஜாமின் கோரி உரிய விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் எனக்கூறி, தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கலாம்.. ஆனால்!!

image

பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும் என காங்., தலைவர் மணிசங்கர் ஐயர் பேசியது சர்ச்சையானது. உ.பி., தேர்தல் பிரசாரத்தில் அதற்கு பதிலளித்துள்ள மோடி, பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருந்தாலும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது என்றும், அதை முறையாக பராமரிக்கக் கூட அவர்களிடம் பணம் இல்லை என்பதை காங்கிரஸ் உணர வேண்டும் எனவும் பதிலளித்துள்ளார்.

News May 17, 2024

100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது

image

100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து, உரிய கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

News May 17, 2024

உலகின் முதல் செல்ஃபோன் அழைப்பு எது?

image

அமெரிக்காவின் மன்ஹாட்டனில் 1973 ஏப்ரல் 3இல் மோட்டோரோலா நிறுவன பொறியாளர் மார்டின் கூப்பர் என்பவர், ஜோயல் என்ஜல் என்பவருடன் செல்ஃபோனில் பேசினார். இதுவே முதல் மொபைல் அழைப்பாகும். இதையடுத்து, செல்ஃபோன் தயாரிப்பில் மோட்டோரோலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் கவனம் செலுத்தின. முதலில் மிகப்பெரிய அளவுகளில் வந்த செல்ஃபோன்கள், 1990களுக்குப் பிறகே, தற்போது நாம் காணும் வடிவில் சந்தைக்கு வந்தன.

News May 17, 2024

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பவில்லை: வடகொரியா

image

ரஷ்யாவுக்கு வடகொரியா எந்த ஆயுதமும் வழங்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை 7,000 கொள்கலன்களில் மாஸ்கோவுக்கு வடகொரியா அனுப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது. இதனை மறுத்த கிம் யோ ஜாங், “வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பியொங்யாங்கில் இருந்து எந்தவொரு ஆயுதமும் ஏற்றுமதி செய்யப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

News May 17, 2024

ஒரே நாடகத்தில் நடித்து சினிமா ஸ்டார்களான 2 நடிகர்கள்

image

விஜய் சேதுபதி, அட்டகத்தி தினேஷ் ஆகியோர் ஆரம்பத்தில் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்தது அறிந்ததே. ஆனால், அதற்கு முன்பு 2 பேரும், டி.வியில் ஒரே நாடகத்தில் இணைந்து நடித்தது தெரியுமா என்பது தெரியவில்லை. சன் டிவியில் 2006இல் ஒளிபரப்பான “பெண்” நாடகத்தில் பரணியாக விஜய் சேதுபதியும், கார்த்திக்காக அட்டகத்தி தினேஷும் நடித்திருந்தனர். அதன் பிறகே 2 பேரும் சினிமாவுக்கு வந்து ஹீரோவாகினர்.

error: Content is protected !!