news

News May 17, 2024

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் பெயர் “ஏஸ்”

image

ஜவான் திரைப்படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி, கத்ரினா கைஃபுடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்தார். இதையடுத்து விடுதலை 2, மஹாராஜா படங்களில் நடித்து வருகிறார். இதேபோல், ஏற்கெனவே அவரது நடிப்பில் 51ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. அந்த படத்தின் ஹீரோயினாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். படத்திற்கு “ஏஸ்” என படக்குழு பெயரிட்டுள்ளது.

News May 17, 2024

கே.எல்.ராகுல், பூரண் அடுத்தடுத்து அரை சதம்

image

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி வீரர்கள் கே.எல்.ராகுல், பூரண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிரடியாக ஆடிய பூரண் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டு 19 பந்துகளில் அரை சதம் கடந்தார். பொறுமையாக ஆடிவந்த கே.எல்.ராகுல் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். தற்போது வரை LSG 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.

News May 17, 2024

10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்

image

குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அதற்கான அறுவை சிகிச்சை செய்தபோதும், அது பலனளிக்காமல் அவர் மரணமடைந்ததாக அவரது பெற்றோர் உருக்கமாக கூறினர்.

News May 17, 2024

எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்

image

ரேபரேலியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார். அப்போது பேசிய சோனியா, தனது குடும்பத்துக்கும் ரேபரேலிக்கும் இடையேயான தொடர்பு மண்ணுக்கும் வேறுக்குமான தொடர்பு போன்றது என்றார். தனது மாமியார் இந்திரா காந்தி, ரேபரேலியை தன்னிடம் அளித்ததாகவும், அதை ராகுலிடம் தான் அளிப்பதாகவும் கூறிய சோனியா, எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன், அவரை ஏற்றுக் கொள்ளுங்கள், அவர் ஏமாற்ற மாட்டார் என்றார்.

News May 17, 2024

ஜெயலலிதாதான் எனது ரோல் மாடல்

image

வெயில் பட இயக்குநர் வசந்த பாலன் இயக்கியுள்ள தலைமை செயலகம் வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதில் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் நடித்துள்ளனர். இதுகுறித்து பேட்டியளித்த ஸ்ரேயா ரெட்டி, ஜெயலலிதா வீடு அருகே 25 ஆண்டுகளாக தான் வசிப்பதாகவும், அவர்தான் தனது ரோல் மாடல், அவர் மாதிரி இருக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் தெரிவித்தார்.

News May 17, 2024

பாஜகவினர் முதலில் இதை பண்ணுங்க: நவீன் பட்நாயக்

image

பாஜகவின் முதல்வர்கள் முதலில் உங்கள் மாநிலத்தை கவனியுங்கள் என ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பல மாநில பாஜகவின் முதல்வர்கள், அமைச்சர்கள் இங்கு வந்து ஒடிஷாவை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன் எனக் கூறிவருகின்றனர். ஆனால், பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் தனி நபர் கடன், ஒடிஷாவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என நவீன் பட்நாயக் சுட்டிக்காட்டினார்.

News May 17, 2024

ஆதார் திருத்தத்தால் கேள்வியை எதிர்கொள்ளும் இல்லத்தரசிகள்

image

திருமணமாகி கணவர் இல்லத்திற்கு சென்ற பெண்கள், ஆதாரில் திருத்தம் செய்த பிறகு வழங்கப்படும் அட்டையில் கணவர் பெயருக்கு முன்பு W/O என்பதற்கு பதில் C/O என வருகிறது. அதாவது, பெண்ணின் பெயருக்குப் பின் தந்தை பெயரும், அதன்கீழ் C/O எனக் குறிப்பிட்டு கணவர் பெயரும் உள்ளது. தெரியாத இடங்களுக்கு ஆதாருடன் செல்கையில் இது பல கேள்விகளுக்கு வழிவகுப்பதாக இல்லத்தரசிகள் புலம்புகின்றனர். இதற்கு தீர்வு தருமா ஆதார் ஆணையம்?

News May 17, 2024

டெல்லி மெட்ரோ ரயிலில் நிர்மலா சீதாராமன் பயணம்

image

டெல்லி மெட்ரோ ரயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லட்சுமி நகருக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது உடன் வந்த பயணிகள் இருக்கையில் அமர்ந்திருக்க, ரயிலில் அவர் நின்றபடியே பயணித்தார். நிர்மலா சீதாராமன் தங்களுடன் மெட்ரோ ரயிலில் பயணித்ததை கண்ட டெல்லிவாசிகள், அவரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை அவரும் நிதானமாக கேட்டறிந்தார்.

News May 17, 2024

அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்

image

ஃபோர்ப்ஸ்-24 வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். அவர் ஆண்டுக்கு $260 மில்லியன் சம்பாதிக்கிறார். முதல் 10 இடங்களில் ஜான் ரஹ்ம் ($218M), மெஸ்ஸி ($135M), ஜேம்ஸ் ($128M), கியானிஸ் ($111M), எம்பாப்பே(110M), நெய்மர் ($108M), பென்செமா ($106M), ஸ்டீபன் கரி ($102M), லாமர் ஜாக்சன் ($100 M) ஆகியோர் உள்ளனர்.

News May 17, 2024

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பவில்லை: வடகொரியா

image

ரஷ்யாவுக்கு வடகொரியா எந்த ஆயுதமும் வழங்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை 7,000 கொள்கலன்களில் மாஸ்கோவுக்கு வடகொரியா அனுப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது. இதனை மறுத்த கிம் யோ ஜாங், “வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பியொங்யாங்கில் இருந்து எந்தவொரு ஆயுதமும் ஏற்றுமதி செய்யப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!