India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புங்க மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இவை சரும நோய்களைப் போக்கும் மிகச் சிறந்த மருந்தாகும். புங்கம் வேர்பட்டைச் சாறு (புங்கம் பால்) உடலை பலப்படுத்த உதவுகிறது. புங்கம் பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்து பொடி செய்து அரை தேக்கரண்டி காலை, மாலை என 2 அல்லது 3 மண்டலம் தேனில் சாப்பிட்டு வர 20 வகை மேக நோயும் நீங்கும். மேலும், உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.
மதத்தை வைத்தே பாஜக பரப்புரை செய்து வருவதாக ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியே நாட்டை மீண்டும் ஆள போகிறது என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அதனால் தான் பிரதமரின் பரப்புரைகளில் அதீத பதற்றம் தெரிவதாக விமர்சித்தார். முஸ்லிம் மக்களை விமர்சித்து வந்த மோடி, தோல்வி பயத்தின் காரணமாக, தற்போது முஸ்லிம் மன்னர்களை எல்லாம் புகழ்ந்தது பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், வெற்றிக்கான வழி கிடைக்கும்.
➤ தனது இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான்.
➤ ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான்.
➤ நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடாவை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்துள்ளது. ஆசிய போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை பர்வீன் உறுதி செய்திருந்தார். இருந்தாலும், ஊக்க மருந்து சோதனை நடத்த கடந்த 1 வருடமாக அவர் ஒத்துழைக்க மறுத்ததாக கூறி, அவருக்கு 1.5 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2027இல் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற உள்ளது. சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) சிறப்பு கூட்டம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் 2027ஆம் ஆண்டுக்கான 10ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது என்பது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது. இதில், பிரேசில் 119-78 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை நடத்துவதற்கான அனுமதியை பெற்றது.
➤ 332 – குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை ரோம பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார்.
➤ 1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக தேர்வு செய்யப்பட்டார்.
➤1912 – முதலாவது இந்தியத் திரைப்படம் சிறீ பந்தாலிக் மும்பையில் வெளியிடப்பட்டது.
➤2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.
➤2015 – கொலம்பியாவில் மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக வாரணாசியில் அஜய்ராய் போட்டியிடுகிறார். ஏற்கெனவே கடந்த 2014 மற்றும் 2019 என 2 முறை மோடியை எதிர்த்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். 2014இல் 7.34%, 2019இல் 14.38% வாக்குகளை பெற்று அவரால் 3ஆவது இடத்தையே பெற முடிந்தது. இந்த முறை அகிலேஷ் யாதவுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால், கணிசமான அளவு வாக்குகளை அவர் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லக்னோவுக்கு எதிரான தோல்வியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. மும்பை 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 10ஆவது இடத்தில் உள்ளது. அதுவும் கடந்த 3 வருடங்களில் 2ஆவது முறையாக கடைசி இடத்தை அந்த அணி பிடித்துள்ளது. இதற்கு முன் 2022இல் 10ஆவது இடத்தை மும்பை பிடித்திருந்தது. 2 முறை கடைசி இடம் பெற்ற அணி என்ற மோசமான சாதனையை மும்பை படைத்துள்ளது.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: கடவுள் வாழ்த்து
◾ குறள் : 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
◾விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்
பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைகளில் விஷத்தை உமிழ்வதாக என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். தென் இந்திய மக்களை பற்றி மோடி அவதூறு பரப்புவதாக தெரிவித்த அவர், நாட்டை பிளவுப்படுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்று பாஜக நினைப்பதாக குற்றம் சாட்டினார். முன்னதாக, தென் இந்திய மக்கள், உ.பி போன்ற வட இந்திய மக்களை தவறாக நினைப்பதாக தேர்தல் பரப்புரையில் மோடி பேசியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.