India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மொபைல் போனுக்கு சார்ஜ் போடுவதற்கு கையடக்க சூரிய ஒளி சார்ஜரை திருச்சி NIT முனைவர் சந்திரசேகர் கண்டுபிடித்துள்ளார். திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்தின் உதவியுடன் இதை கண்டுபிடித்துள்ள அவர், மக்களின் அன்றாடத் தேவையை கருத்தில் கொண்டு இதை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார். இது மக்களின் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது குறித்து தெரியவில்லை. அவரது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ்நாட்டின் அரசுப் பேருந்துகளில் நாளொன்றுக்கு 55 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணத்தை மேற்கொள்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மார்ச் மாத கணக்கெடுப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதில், 60 சதவீத பெண்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். கடந்த ஆண்டு மார்ட் மாதம் நாளொன்றுக்கு 49 லட்சம் பெண்கள் மட்டுமே பயணம் செய்தனர்.
மும்பை அணி ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டதால் நேற்றைய தினம் பும்ராவுக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கர் களம் இறங்கினார். அவர் 2.2 ஓவர்கள் வீசிய நிலையில் காயம் ஏற்பட்டதாக டக்-அவுட்டுக்கு திரும்பினார். அவர் வீசிய 14 பந்துகளில் 22 ரன்கள் குவிக்கப்பட்டன. வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்த அர்ஜுன் தவறிவிட்டதாக மும்பை ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.
‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ ஆகிய படங்களை தயாரித்த வெற்றிமாறன் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் கவின் நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.
மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் கட்சி சொல்லிவருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி ஆட்சியமைத்துதான் திமுக. தற்போது, இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அம்முழக்கத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு தேவை காமராஜர் ஆட்சியா? கருணாநிதி ஆட்சியா?
கடந்த சில நாள்களாக அதிக வெயில் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் கடுமையாக சரிந்ததால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் தண்ணீர் எடுக்க 15 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்வதால், குடிநீர் சிக்கல் நீங்கியுள்ளது.
நாடு முழுவதும் நன்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களின் 49 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி (ரேபரேலி), ஸ்மிருதி ராணி (அமேதி), ராஜ்நாத் சிங் (லக்னோ), பியூஸ் கோயல் (மும்பை வடக்கு), ஸ்ரீகாந்த் ஷிண்டே (மும்பை வடக்கு) ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஐந்தாம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஒருவருக்கு ‘குரு’ உச்சம் பெற்றுவிட்டால் அவருடைய வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிடும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட குரு பகவானின் முக்கியமான திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த ‘திட்டை’ திருத்தலம்தான் மந்திர ஒலிகள் தோன்றிய இடம் என்று ரிஷிகளால் நம்பப்பட்டது. பக்தர்கள் ஒருமுறை திட்டை கோயிலுக்கு சென்றுவந்தால் யோகம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இன்று தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், குமரி, நெல்லை, திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடை மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்னல் தாக்குவது, வீடு இடிந்து விழுவது என இதுவரை 12 பேர் பலியாகியிருக்கின்றனர். மேலும் சில நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.