India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹54,800க்கும், கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹6,850க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹96.50க்கும், கிலோவிற்கு ₹4000 உயர்ந்து ₹96,500க்கும் விற்பனையாகிறது.
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டுமே சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செலுத்தியுள்ளதாகவும், 43,199 பேர் முடி காணிக்கை செய்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உணவுப் பொருள்களை பொறிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே பயன்டுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தும்போது அதிலுள்ள கொழுப்புகள் டிரான்ஸ் கொழுப்புகளாக மாறி இதய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. இவற்றை எப்போதாவது பயன்படுத்தினால் பிரச்னை இல்லை, ஆனால் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘GOAT’ படத்தின் VFX பணிகளை அமெரிக்காவின் புகழ்பெற்ற லோலா நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில், VFX பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாகவும், அதற்கான அவுட்புட்டை காண ஆர்வமாக இருப்பதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இந்த செய்தியால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது.
நாகையில் இருந்து இலங்கை வரையிலான கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கப்பல் பயணத் திட்டத்தை அறிவித்த தனியார் நிறுவனம், மே 13ஆம் தேதி பயணத்தை தொடங்குவதாக அறிவித்தது. பின்னர், அது மே 17 மற்றும் 19ஆம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத காரணங்களால் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படவுள்ளது.
ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி அமரும் நிலைமை அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் மட்டுமே இருந்த கலாசாரம், தமிழ்நாட்டிலும் பரவிவருவது வேதனை அளிக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால், ரயில்கள் என்றாலே யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிலை உருவாகிவிடும். கவனத்தில் கொள்ளுமா ரயில்வே…
நாடு முழுவதும் விற்பனை ஆகும் ORS பாக்கெட்டுகளின் விற்பனை 26% உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வெயிலினால் உடலில் நீர்ச்சத்து குறைவதை சரிசெய்ய ORS அருந்துமாறு அரசு வலியுறுத்துகிறது. அதிலுள்ள தாதுப் பொருட்கள் உடலின் இழந்த சக்தியை மீட்டுத்தரும். நடப்பாண்டில் வெப்பம் அதிகம் என்பதாலும் ORS விழிப்புணர்வினாலும் விற்பனை அதிகரித்துள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யும் 10 பேரில் 7 பேர் உடல் பருமனுடன் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. முழு உடல் பரிசோதனையில் கிடைத்த தகவல்களின்படி, 16% பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும், 13 பேர் ரத்த அழுத்தத்துடன் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், 24% பேருக்கு இருதய பாதிப்பு இருக்கிறது. உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை இவை எடுத்துரைக்கின்றன.
பேருந்துகளின் இலவசப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை என பிரதமர் மோடி புதுப்புரளியை கிளப்பி இருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதவெறுப்பு பரப்புரை கைகொடுக்காததால், மாநிலங்கள் இடையே மோதலைத் தூண்டும் உத்தியை மோடி கையில் எடுத்துள்ளதாக விமர்சித்த அவர், பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது. பொய்மை உடைப்பட்டு வெறுப்பு அகலும், இந்தியா வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.