news

News May 18, 2024

கண் பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம்

image

இந்தியர்களுக்கு தொற்று அல்லாத கண் பார்வை பிரச்னை அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக காற்று, புகை, வெயில் உள்ள இடங்களுக்கு செல்லும் போது கண்கள் வறண்டு விடும். அதிகளவில் செல்போன், கணினியைப் பயன்படுத்துவதும் கண்களைப் பாதிக்கும். இதை அலட்சியமாக விட்டால் நிரந்தரப் பார்வை இழப்பு ஏற்படும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், கண்களை ஈரப்பத்தோடு வைத்திருக்க அறிவுறுத்துகின்றனர்.

News May 18, 2024

மோடியை விமர்சிக்க ₹100 கோடி பேரம்: தேவராஜே கவுடா

image

கர்நாடகாவில் காங்., ஆட்சி கவிழும் என பாலியல் வழக்கில் கைதான பாஜக தலைவர் தேவராஜே கவுடா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி மற்றும் பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவித்தால் ₹100 கோடி தருவதாக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் இருந்து வெளியில் வந்ததும் இது குறித்து அம்பலப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

News May 18, 2024

பெங்களூருவில் நிச்சயம் மழை பெய்யும்

image

பெங்களூருவில் இன்று சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் ஒரு புள்ளி எடுத்தால் கூட சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு சென்றுவிடும் என்ற நிலையில் மழை ஆர்சிபி அணியை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று மாலை பெங்களூருவில் மழை பெய்வதற்கு 90% வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால் RCB ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

News May 18, 2024

கெஜ்ரிவாலின் புகைப்படத்தை நீக்கிய மாலிவால்

image

ஆம் ஆத்மி பெண் எம்பி ஸ்வாதி மாலிவாலை தனது தனிச் தனி செயலாளர் பிபவ்குமார் தாக்கிய விவகாரத்தில் கெஜ்ரிவால் அமைதி காத்தார். இதனால் கடும் அதிருப்தியடைந்த, ஸ்வாதி தனது சமூக வலைதள பக்கத்தில் கெஜ்ரிவால் புகைப்படத்தை நீக்கி, கருப்பு நிறத்தை டி.பி-யாக வைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், அவர் கட்சியில் இருந்தும் விலகுவார் எனக் கூறப்படுகிறது.

News May 18, 2024

இஸ்ரேலுக்கு ஆயுதம் அனுப்புகிறதா இந்தியா?

image

இஸ்ரேல் – காஸா இடையேயான போரில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நேற்றைய தினம், ஆயுதங்களுடன் ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற இந்திய கப்பலுக்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. இதன்மூலம், இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதம் அனுப்பும் தகவல் கசிந்துள்ளது. நேற்றைய தினம், இஸ்ரேல் போரை நிறுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் தடை

image

நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் மும்பை அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறி, MI கேப்டன் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் MI அணி வெளியேறியுள்ளதால், அடுத்த ஆண்டு முதல் போட்டியில் பாண்டியா விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

News May 18, 2024

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்வு

image

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ₹319ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது ₹290ஆக உள்ள நிலையில், ஏப்.1 முதல் ₹319ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதற்காக ₹1229 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரக வேலை உறுதி திட்ட ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

News May 18, 2024

அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது

image

பாஜக அரசியலமைப்பை மாற்ற துடிப்பதைப் போல காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது என்றார். சட்டப் பிரிவுகளில் திருத்தத்தை மட்டுமே மேற்கொள்ள முடியும் என விளக்கிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் 80 முறை சட்டத் திருத்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

News May 18, 2024

விப்ரோ சிஓஓ அமித் சௌத்ரி ராஜினாமா

image

விப்ரோவின் தலைமைச் செயல் அதிகாரியான அமித் சௌத்ரி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட நிறுவனம் மே 31 வரை அவர் பதவியில் தொடர்வார் என அறிவித்துள்ளது. இதையடுத்து இப்பதவிக்கு சஞ்சீவ் ஜெயின் புதிய COOவாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்.6ஆம் தேதி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ராஜினாமா செய்ததில் இருந்து தற்போது வரை 3 மூத்த அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர்.

News May 18, 2024

₹5 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

image

இன்றைய நாளில் ₹5ஐ வைத்து மிட்டாய் வாங்குவதே கடினம். ஆனால், இந்த ₹5 ஒருவரின் வேலையையே பறித்துள்ளது. குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள கிராம அலுவலகத்தில் நவீன் சந்திரா என்ற கம்பியூட்டர் ஆபரேட்டர் ₹5 லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். நில ஆவணங்களை வழங்க ஒவ்வொரு பக்கத்திற்கும் ₹5 பெற வேண்டும் என்ற நிலையில் இவர் ₹10 கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

error: Content is protected !!