news

News May 18, 2024

620 ஏக்கர் நிலத்தை அபகரித்த ஜிஎஸ்டி ஆணையர்?

image

மகாராஷ்டிராவின் ஜதானி கிராமத்தில் 620 ஏக்கர் நிலத்தை, குஜராத் ஜிஎஸ்டி ஆணையர் சந்திரகாந்த் குடும்பத்தினர், உறவினர்களின் பெயரில் அபகரித்துள்ளதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் விளைவாக நில விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மகாபலீஸ்வரர் அருகே உள்ள ஜதானி கிராமத்தை வளைத்துப் போட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

News May 18, 2024

இன்றைய IPL போட்டியில் வெற்றி யாருக்கு?

image

17ஆவது ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றப்போவது யார் என்பதில் CSK, RCB அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. IPLஇல் மே 18ஆம் தேதி நடந்த போட்டிகளில் RCB இதுவரை ஒருமுறை கூட தோற்றதில்லை. அதேநேரம், தோனிக்கு இது கடைசி சீசன் என கூறப்படும் நிலையில், பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டம் தீப்பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

News May 18, 2024

அதானி திட்டத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு

image

அதானி இலங்கை காற்றாலைத் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் சுற்றுச் சூழல் அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. அதன் ஒப்பந்தத்தில், சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்த வெளிப்படையானத் தகவல்கள் இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ள சுற்றுச் சூழல் அமைப்பு, இத்திட்டத்தால் மன்னார் பகுதியின் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கும் எனவும், உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

News May 18, 2024

இந்தியாவில் வலுப்பெறும் ரயில் நெட்வொர்க்

image

இந்தியாவில் ரயில் நெட்வொர்க் அதிகரித்து வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாளொன்றுக்கு 4 கி.மீ. தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படுவதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் 31,000 கி.மீ. ரயில் பாதைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டில் மட்டும் 5,300 கி.மீ. தொலைவிற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

News May 18, 2024

ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் பிபவ்குமார் கைது

image

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன்பு, ஸ்வாதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கெஜ்ரிவால் புகைப்படத்தை நீக்கி, கருப்பு நிறத்தை டி.பி-யாக வைத்த நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் நற்பெயரை கெடுக்க பாஜக சதி செய்வதாக AAP குற்றம் சாட்டியுள்ளது.

News May 18, 2024

மோடி மீது நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்

image

வெறுப்பு பேச்சு மூலம் மக்களைத் தூண்டி விடும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்., தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். காங்., ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசர் கொண்டு இடிப்பார்கள் என்ற பிரதமரின் கருத்துக்கு பதிலளித்த அவர், காங்., கட்சி இதுவரை புல்டோசர் பயன்படுத்தியதில்லை எனக் கூறினார். மேலும், அரசியலமைப்பின்படி அனைத்தும் பாதுகாக்கப்படும் என்றார்.

News May 18, 2024

நடிகை அனுஷ்காவுக்கு திருமணமா?

image

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு வெற்றி பட வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். இதனிடையே, அவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், 45 வயதான கன்னட சினிமா தயாரிப்பாளரை அவர் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் தீயாய் பரவி வருகிறது. இருப்பினும், இது குறித்து அனுஷ்கா தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

News May 18, 2024

FLiRT வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தாது

image

புதிதாக பரவிவரும் FLiRT வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் ஐரோப்பாவில் பரவிய இந்த வகை கொரோனா, சில தினங்களுக்கு முன் இந்தியாவிற்குள்ளும் புகுந்தது. இதுகுறித்து தீவிரமாக ஆய்வு செய்த ஐரோப்பிய ஆய்வாளர்கள், ஒமேகா வைரஸால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறதோ, அதே அளவு பாதிப்புதான் FLiRT வைரஸால் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர்.

News May 18, 2024

பூக்களின் விலை ‘கிடுகிடு’ உயர்வு

image

மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வரத்து குறைந்ததாலும், நாளை முகூர்த்த நாள் என்பதாலும் ரூ.250க்கு விற்பனையான மல்லிகைப்பூ தற்போது ரூ.1,250, பிச்சிப்பூ கிலோ ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாடாமல்லி, சம்பங்கி பூ, முல்லை, கேந்தி, ரோஸ் ஆகிய பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

News May 18, 2024

கண் பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம்

image

இந்தியர்களுக்கு தொற்று அல்லாத கண் பார்வை பிரச்னை அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக காற்று, புகை, வெயில் உள்ள இடங்களுக்கு செல்லும் போது கண்கள் வறண்டு விடும். அதிகளவில் செல்போன், கணினியைப் பயன்படுத்துவதும் கண்களைப் பாதிக்கும். இதை அலட்சியமாக விட்டால் நிரந்தரப் பார்வை இழப்பு ஏற்படும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், கண்களை ஈரப்பத்தோடு வைத்திருக்க அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!