India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை 2’ படத்தின் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதை தொடர்ந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் அதற்கிணையாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் இன்று இரவு சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இதனிடையே, அங்கு இன்று மாலை மழை பெய்வதற்கு 90% வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். எனினும், தற்போது வரை அங்கு வெயில் அடித்து வருகிறது. தொடர்ந்து, சின்னசாமி ஸ்டேடியத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படத்தை பகிர்ந்து மழைக்கான அறிகுறி இல்லை என RCB ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இன்று செய்தியாளர்கள் விஜய் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கலகலப்பாக பதிலளித்தார். தவெக மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, “செல்வேன். அண்ணனும் தம்பியும் சேரக்கூடாது என்றுதான் நினைக்கிறார்கள்” என்றார். 2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “I am Waiting” என்று புன்னகைத்தார் சீமான்.
ரஷ்யா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளிடம் இருந்து கற்றுக் கொண்டதை, மோடி இந்தியாவில் பிரதிபலிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ரஷ்யாவில் புதின் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்பி வெற்றி பெற்றதையும், பாகிஸ்தானில் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டதையும், வங்க தேசத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்ததையும் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, பட்டத்து இளவரசராக இருந்த அவரது மகன் சார்லஸ் 2022ஆம் ஆண்டு மன்னராக மகுடம் சூடினார். ஆனால், சில மாதங்களிலேயே அவர் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானார். தற்போது அவர் அதில் இருந்து மீண்டு வரும் சூழலில், அவரது மருமகள் கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்கால ராணியான அவர், புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார்.
இன்றைய ஆட்டம், தோனியுடன் விளையாடும் கடைசி போட்டியாக கூட இருக்கலாம் என விராட் கோலி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தோனி எந்த மைதானத்தில் விளையாடினாலும், ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள் என்றும், தோனியுடன் நிறைய பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தாங்கள் ஒரே போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர், முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 – 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு <
ஊடுருவல்காரர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடைக்கலம் அளித்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் நட்டா குற்றம் சாட்டியுள்ளார். மம்தா வாக்கு வங்கி அரசியல் செய்வதாக விமர்சித்த அவர், ஊடுருவல்காரர்களுக்கு ரேஷன் கார்டு, அடையாள அட்டை கொடுத்து வாக்காளர்களாக மாற்றுவது தேச விரோதம் எனத் தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கத்தில் சிஏஏ குறித்து தவறான கருத்து பரப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் படி, தூதரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கிர்கிஸ்தான் மற்றும் எகிப்திய மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, பிஷ்கெக் பகுதியில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் மீது சில கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், சில பாகிஸ்தான் மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இந்திய மாணவர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு நாளையும் நாளை மறுநாளும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நாளை (மே 19) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 20ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பேரிடர் மீட்புக்குழுவினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.