India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக இதுவரை 10 பேர் சதமடித்துள்ளனர். 2013இல் புனே அணிக்கு எதிராக 30 பந்துகளில் ஆர்சிபி வீரர் கெய்ல் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். இதற்கடுத்து யூசுப் பதான் (37 பந்துகள்), மில்லர் (38), டிராவிஸ் ஹெட் (39), வில் ஜேக்ஸ் (41), கில் கிறிஸ்ட் (42), டி வில்லியர்ஸ் (43), வார்னர் (43), ஜெயசூர்யா (45), அகர்வால் (45), முரளி விஜய் (46) ஆகியோர் அதிவேகமாக சதமடித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரோ, பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் அப்பகுதியை கேட்க வேண்டாம் என கூறுகிறார், ஆனால், பாகிஸ்தானிடம் உள்ள அணுகுண்டை கண்டு பாஜக அஞ்சாது, அப்பகுதியை மீட்போம் என்றார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேர்தல் விதிமீறல் உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்க சி.விஜில் என்ற செயலியை EC ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 4.24 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 4,23,908 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், தற்போது 409 புகார்கள் மட்டுமே விசாரணையில் உள்ளதாகவும், 89% புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டதாகவும் EC தெரிவித்துள்ளது.
டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதாகவும், இறுதிப் போட்டியில் சரியாக விளையாடாததால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றும், டி20 உலக கோப்பை இந்திய அணி, பார்மில் உள்ள வீரர்கள், அனுபவ வீரர்களை கொண்ட நல்ல கலவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் உடன் ஐடிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தை இணைக்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். முன்னதாக, இரு வங்கிகளையும் இணைக்க கடந்த டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருந்தது. இணைப்புக்கு பிறகு, 100 ஐடிஎஃப்சி லிமிடெட் பங்குகளுக்கு இணையாக 155 ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் பங்குகள் பங்குதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், இரு நிறுவன பங்குகளும் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 2 பலம் வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். போட்டிக்கு நடுவே மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஓவர்கள் குறைக்கப்படுமா? போட்டி நடக்குமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக கடலோர பகுதிகளில் 55-65 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதி, கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு-மாலத்தீவு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடலில் 55 கி.மீ. வேகத்திலும், 20, 21,22இல் 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி வீசக்கூடும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதனிடையே, தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் நாட்டில் இதுவரை ₹849.15 கோடி ரொக்கம், மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்கள் என ₹8,889 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும், ₹69.59 கோடி ரொக்கம் உட்பட ₹543.72 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரேபரேலிக்கு பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி காரில் பயணித்த போது, தங்கள் குழந்தை பருவத்தை இருவரும் நினைவுக் கூர்ந்தனர். இது குறித்த வீடியோவை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல், பாட்டியின் புத்திசாலித்தனம், அப்பாவுக்குப் பிடித்த ஜிலேபி, பிரியங்கா செய்த கேக்குகள் எல்லாம் நினைவுக்கு வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ரேபரேலியில் முதல்முறையாக ராகுல் காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.