India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மெர்கட்டார் பெட்ரோலியம் நிறுவனத்தை நாட்டின் முன்னணி பொதுத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) கையகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் கண்டுபிடிப்பு & தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுவந்த இந்நிறுவனம் கடந்த மாதம் திவாலானது. இதனையடுத்து, அதன் 100% பங்குகளை கையகப்படுத்த விண்ணப்பித்திருந்த ஐ.ஓ.சி நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்புதலைப் பெற்று ₹148 கோடிக்கு வாங்கியுள்ளது.
RCB அணிக்கு எதிரான 68ஆவது போட்டியில், 3 விக்கெட்டுகள் (27 ரன்கள்) வித்தியாசத்தில் தோற்ற CSK அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் CSK களமிறங்கியது. ஜடேஜா – தோனி ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ரன் ரேட் ஏறியதால், கரைதேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட CSK அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது.
இன்று (மே 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதாக இருக்க வேண்டும். காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜிட்டிக்காக இருக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி, ஓட்ஸ், தயிர், கிரீன் டீ, நட்ஸ் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்த பிறகு இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில், இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் உருவாக்கிய இடஒதுக்கீடு முறையை மத்திய பாஜக அரசு பின்பற்றி வருகிறது. அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. என்.டி.ஏ அரசு அம்பேத்கர் வகுத்த பாதையில் பயணிக்கிறது” எனக் கூறினார்.
ஜெர்மனியில் உள்ள குர்பல்ஸ் காலாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், இந்திய வீராங்கனை தங்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஜோதி யராஜி, 13.06 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பெற்றார். தொடர்ந்து 2ஆவது முறையாக ஜெர்மனியில் தங்கம் வென்ற அவர், கடந்த வாரம் நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
*மாநிலங்கள் இடையே மோதலைத் தூண்ட பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் – ஸ்டாலின்
*காங்கிரஸ் – ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளன – மோடி
*பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பா.ஜ.,வுக்கு என்ன தெரியும்? – சீமான்
*மெர்கட்டார் பெட்ரோலியம் நிறுவனத்தை ₹148 கோடிக்கு ஐ.ஓ.சி நிறுவனம் கையகப்படுத்தியது.
*CSK அணிக்கு எதிரான லீக் போட்டியில், RCB அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
CSK அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில், RCB அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து போராடி தோற்றது. ரஹானே, சான்ட்னர் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு RCB அணி செல்லும் வாய்ப்பை உறுதிசெய்தார்.
இன்று (மே 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ராக்கெட் என்பது உந்துசக்தி கொண்ட சாதனம் ஆகும். இது ஏதேனும் ஒரு சாதனத்தை சுமந்து சென்று வான்பகுதி அல்லது விண்ணில் செலுத்தும். ராக்கெட்டில் சில திருத்தம் செய்து ஏவுகணையாகவும் பயன்படுத்தலாம். அதேநேரத்தில், செயற்கைக்கோள் என்பது விண்ணில் சுற்றி வரும் ஒரு சாதனம். இதை பூமி அல்லது வேறு கிரகங்களை சுற்றிவரச் செய்து ஆய்வு நடத்த முடியும். செயற்கைக்கோள் ராக்கெட் மூலமே விண்ணில் செலுத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.