news

News May 5, 2024

ப்ளூகார்னர், ரெட்கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன? (3)

image

யெல்லோ கார்னர் நோட்டீஸ் என்றால், காணாமல் போன நபரைக் கண்டறிய (அ) தன்னை அடையாளம் காண முடியாதிருக்கும் ஒரு நபரை அடையாளம் காண்பதற்கானது. பிளாக் கார்னர் நோட்டீஸ் என்றால், அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கானது. ஆரஞ்சு கார்னர் நோட்டீஸ் என்றால், நபர்கள் மற்றும் சொத்துகளுக்கு ஆபத்தைக் குறிக்கும் உடனடி அச்சுறுத்தல்களான நிகழ்வு, நபர், பொருள் (அ) செயல் குறித்து எச்சரிப்பது.

News May 5, 2024

ப்ளூகார்னர், ரெட்கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன? (2)

image

ப்ளூகார்னர் நோட்டீஸ் எனில், குற்றவியல் விசாரணையில் தொடர்புடைய ஒருவரைக் கண்டறிதல், அடையாளம் காணுதல் (அ) தகவல்களைப் பெறுவதற்கானது. ரெட்கார்னர் நோட்டீஸ் எனில், தேடப்படும் ஒரு நபரின் இடம் கண்டறிதல், கைது செய்திட அல்லது ஒப்படைக்கும் நோக்கில் தேடுவது. க்ரீன் கார்னர் நோட்டீஸ் என்றால், பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு நபரின் குற்றச் செயல்கள் குறித்து எச்சரிக்கை செய்வதற்கானது.

News May 5, 2024

ப்ளூகார்னர், ரெட் கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன? (1)

image

சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போல், பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. உறுப்பு நாடுகள், குற்றவாளிகள் குறித்து தகவலை அளித்து உதவி கோரினால், அவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி செய்யும். இதற்காக ரெட், யெல்லோ, ப்ளு, பிளாக், க்ரீன், ஆரஞ்ச் மற்றும் பர்பில் நிற நோட்டீஸ்களை தனித்தனியே வெளியிடும். இன்டர்போல் வெளியிடும் 7 நிற நோட்டீஸ்களுக்கும் தனித்தனி அர்த்தம் உண்டு.

News May 5, 2024

தேவ கவுடா பேரனுக்கு எதிராக மீண்டும் ப்ளூ கார்னர் நோட்டீஸ்

image

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், மஜத எம்பியுமான பிரஜ்வாலுக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு மீண்டும் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 400க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவர் வீடியோ எடுத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெளிநாடு தப்பிவிட்ட நிலையில், 2வது முறையாக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

டைட்டானிக் பட நடிகர் உயிரிழப்பு

image

டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டனாக நடித்த பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 79 வயதான அவர், டைட்டானிக் படத்தில் எட்வார்ட் ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லார்ட் ஆப் தி ரிங்ஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக டைட்டானிக் படத்தில் இணைந்து நடித்த பார்பரா டிக்சன் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News May 5, 2024

லக்னோ அணிக்கு 236 ரன்கள் இலக்கு

image

ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் போட்டியில் லக்னோ அணிக்கு 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி. டாஸ் வென்ற LSG அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய KKR அணி அதிரடியாக விளையாடியது. சுனில் நரைன் 81, சால்ட், ரகுவன்ஷி தலா 32 ரன்கள் விளாசினர். LSG தரப்பில் நவீன் உல்-ஹக் 3 விக்கெட், யாஷ் தாக்கூர், ரமன்தீப், யுத்வீர் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

News May 5, 2024

சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது

image

இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல் எண் மூலமாகவும், வெளிநாட்டுப் பயணிகள் இ மெயில் மூலமாகவும் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்கலாம் என தெளிவுப்படுத்தியுள்ளது.

News May 5, 2024

வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட சிமர்ஜீத் சிங்

image

சிமர்ஜீத் சிங் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததாக ருதுராஜ் பாராட்டியுள்ளார். ஐபிஎல் பயிற்சியின் போதே 150 கிமீ வேகத்தில் பந்து வீசிய சிமர்ஜீத் சிங்குக்கு இதுவரை வாய்ப்பு தர முடியாமல் இருந்ததாக கூறிய அவர், இன்றைய போட்டியில் தனது திறமையை அவர் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார். பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் 3 ஒவர் பந்துவீசி 2 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி சென்னையின் வெற்றிக்கு உதவினார்.

News May 5, 2024

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன்? ராகுல் பதில்

image

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை நிறம் உள்ளதால், அந்த நிற டி-சர்ட்டை அணிவதாகவும், எளிமையாக இருப்பதை தாம் விரும்புவதாகவும் ராகுல் பதிலளித்தார்.

News May 5, 2024

ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல்

image

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுடன் ரேவண்ணா நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரிடம் 3 நாள்கள் விசாரிக்க உள்ளனர். இதே புகாரில் சிக்கிய அவரது மகன் பிரஜ்வால் தலைமறைவாக உள்ளார்.

error: Content is protected !!